இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரமும், டிஜிட்டல் சேவை தளமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் வேளையில் நாட்டில் டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் சில வர்த்தகச் சரிவுகளைச் சந்தித்தாலும், சில வாரங்களில் சரிவில் இருந்து மீண்டது.
இதனால் டெக் துறையில் இருக்கும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்தக் கொரோனா காலத்தில் பெரிய அளவிலான பாதிப்பு எதிர்கொள்ளவில்லை. இந்நிலையில் ஹூரன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் டெக் துறையில் டாப் 10 இடங்களைப் பிடித்தவர்கள் யார் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
முதல் இடம்
இந்திய ஐடி துறையில் டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களுடன் தொடர்ந்து போட்டிப்போட்டு வரும் ஹெச்சிஎல் நிறுவனம் 2019 முதல் 2020 முதல் பல்வேறு பிரிவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தும் வர்த்தகம் மற்றும் வருமானத்தை மேம்படுத்தியுள்ளது. இதன் படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரான ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 34 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1,41,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஷிவ் நாடார் இந்தியாவின் டெக் பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
2வது இடம்
விப்ரோ சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனரான அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 2 சதவீதம் சரிந்து மொத்த சொத்து மதிப்பு 1,14,400 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
3வது இடம்
கிளவுட் செக்யூரிட்டி சேவை நிறுவனமான Zscaler நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் சிஇஓவான ஜே சவுதிரி 65,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய டெக் பில்லியனர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
4வது இடம்
இந்தியாவின் டிஜிட்டல் கல்வி துறையைப் புரட்டிப் போட்ட பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் பைஜூ ரவீந்திரன் மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு 20,400 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து இந்தியாவின் டெக் பில்லியனர் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
5வது இடம்
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான் எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் சொத்து மதிப்பு இந்த வருடம் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து 18,100 கோடி ரூபாயாக உள்ளது. இதன் மூலம் எஸ் கோபாலகிருஷ்ணன் இந்திய டெக் பில்லியனர் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மற்றவர்கள்
16,400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இன்போசிஸ் நாராயணமூரத்தி 6வது இடத்தையும், 16,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் Endurance Technologies நிறுவனத்தின் தலைவர் அனுராங் ஜெயின் 7வது இடத்தையும், 15,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சின்டெல் நிறுவனத்தின் தலைவர்களான பாரத் தேசாய் மற்றும் நீரஜ் சேத்தி ஆகியோர் 8வது இடத்தையும், 14,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மீடியா.நெட் நிறுவனத்தின் தலைவரான திவ்யாங் துராக்கியா 9வது இடத்தையும், 13,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கவிடார்க் ராம் ஸ்ரீராம் 10வது இடத்தையும் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications