நடுத்தர மக்கள் இனி ரூ.70 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரையிலான விலையில் ஒரு வீட்டை தேட வேண்டாம். ஏன் தெரியுமா..? நாட்டின் பெரிய கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து அந்த விலையில் புதிய திட்டங்களை எதிர்பார்க்க முடியாது. DLF, லோதா (Lodha), ஓபராய், ஷோபா (Sobha) போன்ற இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த முறை நடுத்தர விலையுள்ள ஒரு வீட்டுக் கட்டுமானத் திட்டத்தை கூட தொடங்கவில்லை.
அந்த நிறுவனங்கள் இப்போது அறிவித்த அல்லது விற்பனைக்குக் கொண்டு வந்த அனைத்து வீடுகளின் விலையும் ரூ. 2 கோடிக்கு மேல் தான் இருக்கிறது. அதாவது, அவர்கள் இப்போது பணக்காரர்கள் மற்றும் ஆடம்பர வீடுகளை வாங்குபவர்களை மட்டுமே குறிவைக்கிறார்கள்.

ஏன் இந்த மாற்றம்..?:சந்தையில் எப்போதும் வீடுகள் வாங்க அதிக அளவில் தேவைப்படுவது நடுத்தர மக்களே என்றாலும், பெரிய நிறுவனங்கள் ஏன் இந்த முடிவை எடுத்தன என்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.
லாபம் குறைவு : வீடுகளைக் கட்டுவதற்கான சிமெண்ட், இரும்பு போன்ற பொருட்களின் விலை பயங்கரமாக உயர்ந்துவிட்டது. மேலும், அரசு விதிக்கும் வரிகளும் அதிகம். இதனால், நடுத்தர விலையில் (ரூ. 70 லட்சம் முதல் ரூ. 1.5 கோடி) வீடுகளை விற்றால், கிடைக்கும் லாபம் குறைந்துவிடுகிறது. ஆனால், ஆடம்பர வீடுகளை அதிக விலைக்கு விற்கும் போது லாபம் அதிகமாக கிடைக்கிறது.
பணக்காரர்கள் தயங்குவதில்லை : பணக்காரர்கள், வட்டி விகிதம் ஏறினாலும் கவலைப்படாமல் தொடர்ந்து பெரிய வீடுகளை வாங்கி வருகிறார்கள். அதனால், அந்தப் பிரிவில் விற்பனை நன்றாக நடக்கிறது.
DLF போன்ற பெரிய நிறுவனங்கள், இப்போது தாங்கள் விற்ற வீடுகள் அனைத்தும் குருகிராம், மும்பை போன்ற பகுதிகளில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையுள்ள திட்டங்கள்தான் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன. "சந்தையில் ஆடம்பரப் பிரிவில் உறுதியான தேவை இருப்பதால், தொடர்ந்து அதில்தான் கவனம் செலுத்துவோம்" என்று தெரிவித்துள்ளனர்.
நடுத்தர மக்களின் நிலை என்ன..?:முன்னதாக ரூ.70 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை இருந்த 'நடுத்தரப் பிரிவு' இப்போது ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி என்ற புதிய விலைப் பிரிவுக்கு மாறிவிட்டதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகிறார்கள். புனே, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த விலையில்தான் இப்போது நிறைய வீடுகள் வருகின்றன.
உண்மையில், வேலை வாய்ப்பு, நகரங்களுக்கு மக்கள் குடியேறுவது போன்ற காரணங்களால் நடுத்தர மக்களுக்கு வீட்டுத் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஆனால், முன்னணி நிறுவனங்கள் விலகிச் சென்றதால், சந்தையில் நடுத்தர விலையுள்ள வீடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
RERA போன்ற கடுமையான சட்டங்கள் வந்த பிறகு, சிறிய நிறுவனங்கள் பல சந்தையை விட்டு விலகிச் சென்றுவிட்டன. அதனால், பெரிய நிறுவனங்கள் இப்போது அதிக லாபம் தரும் ஆடம்பரப் பிரிவில் மட்டும் கவனமாக முதலீடு செய்து, தங்கள் நிதி பலத்தை அதிகரித்து வருகின்றன. இந்த நிலை, குறைந்த விலையில் வீடு வாங்க ஆசைப்படும் நடுத்தர மக்களின் கனவை எட்டாத தூரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications