இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார்.. சொத்து மதிப்பு எவ்வளவு.. இதோ முழு விவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனவின் காரணமாக கடந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக பலரும் கருதி வருகின்றனர். ஆனால் இது பல பெரிய முன்னணி வர்த்தகர்களுக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது.

ஏனெனில் அவர்களின் சொத்து மதிப்புகள் வியக்கதக்க அளவு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தினை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பிடித்துள்ளார்.

உலக அளவில் முதல் பணக்காரர் யார்?

உலக அளவில் முதல் பணக்காரர் யார்?

பிரபலமான பத்திரிகை நிறுவனமான போர்ப்ஸ், 35-வது ஆண்டாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் கோடீஸ்வரராக அமேசான் சிஇஓ ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டாப் பணக்காரர்கள் யார் யார்?

இந்தியா டாப் பணக்காரர்கள் யார் யார்?

ஆசிய அளவில் பெரும் கோடீஸ்வரராக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலராகும், இவர் பல துறைகளில் இருந்து வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதே இரண்டாவது இடத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளார். இவரின் சொத்துமதிப்பு 50.5 பில்லியன் டாலராகும். இவரின் வருவாய் உள்கட்டமைப்பு துறையின் மூலம் கிடைக்கிறது.

 

Array
 

Array

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சி எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 23.5 பில்லியன் டாலராகும்.

இதே நான்காவது இடத்தில் ராதாகிஷன் தமனி உள்ளார். இவர் இந்தியாவின் முன்னணி ரீடைல் வர்த்தக நிறுவனமான டிமார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் தலைவராவார். இவரின் சொத்து மதிப்பு 16.5 பில்லியன் டாலராகும்.

 

Array

Array

இன்று இந்தியாவில் இயங்கி வரும் தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவரான உதய் கோடக் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். இவரின் சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டாலராகும்.

ஆறாவது இடத்தில் உள்ள லட்சுமி மிட்டல், உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஆர்சலர்மிட்டல் குழுமத்தின் நிறுவனரான இவரின் சொத்து மதிப்பு 14.9 பில்லியன் டாலராகும்.

 

Array

Array

ஏழாவது இடத்தில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான குமார் பிர்லா, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராவர். இவரின் சொத்து மதிப்பு 12.8 பில்லியன் டாலராகும்.
இந்தியாவில் தற்போது கொரோனா மருந்து தயாரிப்பில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனவல்லாவின் சொத்து மதிப்பு 12.7 பில்லியன் டாலராகும். இவர் டாப் 10 பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார்.

Array

Array

இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் தான் திலீப் சங்வி. இந்தியா மட்டும் அல்ல, சர்வதேச நாடுகளிலும் தனது வணிகத்தினை விரிவுபடுத்தியுள்ள இவரின் சொத்து மதிப்பு 10.9 பில்லியன் டாலராகும்.

சுனில் மிட்டல் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பானது 10.5 பில்லியன் டாலராகும். இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் தலைவர் தான் சுனில் மிட்டல் ஆவார்.

இந்தியா மூன்றாவது இடம்

இந்தியா மூன்றாவது இடம்

இந்தியாவில் கடந்த ஆண்டு 102 பேர் கோடீஸ்வரர்களாக இருந்த நிலையில், இந்தாண்டு 140 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பிடித்தது. 724 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 698 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s top richest billionaires and their networth

Top richest billionaires list.. India’s top richest billionaires and their networth
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X