பொதுவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மக்கள் பயப்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் 10 ரூபாய் தொடங்கி பல ஆயிரங்களில் முதலீடு செய்து பல கோடிகளில் லாபம் பார்க்கும் ஆட்களும் உண்டு. அப்படி ஆயிரங்களில் முதலீடுகளைத் தொடங்கி இன்று பங்குச் சந்தையில் வெற்றி மனிதர்களாக பலர் மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், நிதி நிபுணர்களாகவும் உள்ளனர்.
இந்தியப் பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த, இன்னும் பல வெற்றிகளை குவித்து வரும் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளர்களான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கி ராதாகிருஷ்ணன் தமனி உட்பட இன்னும் பலரின் வெற்றிக்கான ரகசியங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!
இந்தியாவின் 'வாரன் பப்பெட்' மற்றும் 'இந்திய பங்குச்சந்தையின் தந்தை' என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர் இந்திய சந்தைகளில் முதலீடு செய்து பிரபலமடைந்த தனிநபர் முதலீட்டாளர் ஆவார். பங்குச்சந்தை என்றாலே பலரும் அஞ்சி நடுங்கும் போது, இளம் வயதிலேயே பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாக கோடிகளை குவித்து சாதித்துக்காட்டியவர்.
பங்குச் சந்தைகளில் முதலீடு என்பதையும் தாண்டி, ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்து வருகிறார்.
1985-ல் 500 ரூபாயைக் கொண்டு பங்குச் சந்தையில் அவரின் முதலீட்டை தொடங்கினார் ஜுன்ஜுன்வாலா. இன்று அவரது பங்குகளின் மதிப்பு ரூ.32,000 கோடியாக உள்ளது. இந்த வளர்ச்சிதான் அவரை பங்குச் சந்தை உலகில் நாயகனாக நிலைநிறுத்தியது. இத்தனை புகழுக்கும் காரணமாக இருந்தவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
ராதாகிருஷ்ணன் தமனி- ரீ-டெயில் உலகின் நம்பர் 1!
2002-ம் ஆண்டில் மும்பையின் புறநகர் பகுதியில் தனது சில்லறை வணிகத்தை ஆரம்பித்தார் ராதாகிஷன் தமனி. தன் குடும்பத்தினர் அனைவரையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக சேர்த்துள்ள அவர், சில்லறை வர்த்தகத்தில் ஒரு பழைமைவாதி என்று அழைக்கப்படுகிறார்.
இன்று ரிலையன்ஸ் ரீடெயில், கிஷோர் பியானியின் ஃப்யூச்-சர் குழுமம் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக சில்லறை வணிகத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழ்வது ராதாகிஷன் தமனியின் அவென்யூ சூப்பர்மார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த டிமார்ட் செயின் ஹைப்பர் மார்க்கெட்கள் தான்.
இவர் The Dhandho Investor and Mosaic மற்றும் Perspectives on Investing எனும் இரண்டு முதலீடுகளைப் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஆஷிஷ் தவான் (Ashish Dhawan)
ஆஷிஷ் தவான் தனது எம்பிஏ படிப்பை ஹார்ட்வார்டு யுனிவர்சிட்டியில் முடித்துள்ளார். இவர் ஒரு பிரபலமான பிலாந்தெரபிஸ்ட் மற்றும் ஈக்விட்டி பைனாசியராகவும் உள்ளார். இந்தியாவின் மிகப் பிரபலமான தனியார் கிறிஸ் கேப்பிட்டலில் பணியாற்றியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்தில் பணியாற்றியப் பிறகு 2012 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை விட்டு விலகியுள்ளார்.
Nemish S. Shah!
நெமிஷ் எஸ். ஷா பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு சிறந்த நிதி ஆலோசனைகளையும் நடைமுறை தீர்வுகளையும் வழங்கி வருகிறார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால லாபகரமான போர்ட்ஃபோலியோக்களை உருவாக்கித் தருவதில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட நிதி ஆலோசகராகவும் உள்ளார்.


Click it and Unblock the Notifications