இந்திய பொருளாதாரம் சேவை துறையை அதிகம் சார்ந்து இருந்த காலம் மாறி தற்போது உற்பத்தி பொருளாதாரமாக மாறி வருகிறது. சீனாவுக்கு இணையாக உற்பத்தித் துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என திட்டமிட்டு வரும் இந்திய அரசுக்கு, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த 4 வருடத்தில் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளம், இதனால் இந்தியாவின் உற்பத்தியும், ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (Merchandise Exports) மதிப்பு 437.06 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை உச்சத்தைத் தொட்டு உள்ளது. இந்த சாதனை ஏற்றுமதி மதிப்பில் முதன்மையாக இருக்கும் மாநிலங்களில் முதல் இடம் யாருக்கு தெரியுமா..?
குஜராத் மாநிலம் இந்த ஆண்டு சுமார் 134.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் 67.2 பில்லியன் டாலரும், தமிழ்நாடு 43.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் டாப் மாநிலங்கள் மத்தியில் ஏற்றுமதியில் வளர்ச்சிப் பாதையில் இருப்பது தமிழ்நாடு மட்டுமே, சிறிய மாநிலங்கள் பல லோவர் பேஸ் அடிப்படையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்து நிற்கிறது.
டாப் 3 மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகா 26.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், உத்தரப்பிரதேசம் 20.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும் ஏற்றுமதி செய்துள்ளது. தமிழ்நாட்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது குஜராத்.
குஜராத் ஏற்றுமதியில் பெரும் பங்கு பெட்ரோலியம் பொருட்களைச் சார்ந்து உள்ளது, சுமார் 52.91 பில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியம் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதை தொடர்ந்து இன்ஜினியரிக் கூட்ஸ் பிரிவில் 11.87 பில்லியன் டாலர், ஆர்கானிக் மற்றும் இன்ஆர்கானிக் கெமிக்கல் பிரிவில் 10.335 பில்லியன் டாலர், ரத்தினம் மற்றும் நகைகள் பிரிவில் 8.44 பில்லியன் டாலர், பார்மா 4.4 பில்லியன் டாலர் என பல பிரிவில் அதிகப்படியான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் முதலீட்டின் வலிமையை இந்த சாதனை ஏற்றுமதி மதிப்பு எடுத்துக்காட்டுகிறது. உலகளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்த சாதனை ஏற்றுமதி வர்த்தகம் அபாரமான சாதனை ஆகும்.
மத்திய அரசின் ஏற்றுமதி இலக்கு திட்டங்கள் மூலம் நாட்டின் ஏற்றுமதியை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் மூலமும், உலகளவில் போட்டித்திறன்மிக்க சூழலை உருவாக்குவதன் மூலமும், புதிய முதலீடுகளைப் பெற முடியும்.
இந்த சாதனை ஏற்றுமதி வர்த்தகம், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும், அதேவேளையில் வேலைவாய்ப்பு துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வரும். மேலும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான தொடர் முயற்சிகள் மூலம், இந்தியா உலக வர்த்தகத்தில் முன்னணி நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications