கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 5.4 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே சமயம் வர்த்தக பற்றாக்குறையும் 5% வீழ்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதத்திற்கான, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி குறித்தான தரவினை வெளியிட்டுள்ளது.
அதன் படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 5.4 சதவீதம் குறைந்து, 24.82 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இந்த ஏற்றுமதியில் பெட்ரோலியம் பொருட்கள், ஜெம் & ஜூவல்லரி, லெதர் மற்றும் பொறியியல் பொருட்கள் உள்ளிட்டவை சரிவினை கண்டுள்ளதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியினை கண்ட பிறகு, அக்டோபரில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் வர்த்தக பற்றாக்குறையும், 8.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முன்னர் 11.76 பில்லியன் டாலராக இருந்தது. இது 25% மேல் குறைந்துள்ளது கவனிக்கதக்க விஷயம்.
ஏற்றுமதி சரிந்துள்ள இந்த நேரத்தில், இறக்குமதியும் 19.6 சதவீதம் சரிந்து, 30.3 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. குறிப்பாக மெர்சன்டைஸ் ஏற்றுமதி அக்டோபரில் 24.82 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 26.23 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 5 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெள்ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் ஏற்றுமதியானது, அக்டோபரில் சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக பெட்ரோலியம் பொருட்கள் 53.30 சதவீத சரிவினையும், முந்திரி 21.57%, ஜெம்ஸ் & ஜூவல்லரி 21.27% சரிவினையும், லெதர் பொருட்கள் 16.69% சரிவினையும், யார்ன்/பேப்ரிக்ஸ்/ 12.82%-மும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியானது 12.82%-மும், காஃபி 9.25%மும், கடல் பொருட்கள் 8.09%-மும், இதே பொறியியல் பொருட்கள் 3.84% வீழ்ச்சி கண்டுள்ளது.
அரிசி, எண்ணெய் உணவு, இரும்பு தாது, எண்ணெய் விதைகள், தரைவிரிப்பு, மருந்துகள், மசாலா பொருட்கள், பருத்தி மற்றும் கெமிக்கல்ஸ் ஏற்றுமதி சற்று சாதகமாக ஏற்றுமதியினை கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் - அக்டோபரில் ஏற்றுமதி 19.05% சரிந்து, 150.07 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 182.29 பில்லியன் டாலர்களாக இருந்தது கவனிக்கதக்கது.
எண்ணெய் இறக்குமதியானது அக்டோபர் மாதத்தில் 38.52% குறைந்து, 5.98 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - அக்டோபர் மாதத்தில் இறக்குமதி 49.5% குறைந்து, 37.84 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. முந்தைய ஆறு மாத சரிவுக்கு பின்னர் கடந்த செப்டம்பரில் தான் 5.99% ஏற்றம் கண்டு, 27.58 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது கவனிக்கதக்க விஷயமாகும்.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications