டெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 0.25% சரிவினைக் கண்டு, 27.67 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதே சமயம் இறக்குமதி 6.98 சதவீதம் அதிகரித்து 40.55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை மீண்டும் 12.88 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது,
இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 10.16 பில்லியன் டாலர்களாக இருந்தது என்று அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஏற்றுமதி சரிவு
இதே ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் ஏற்றுமதி 255.92 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 291.87 பில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் ஏற்றுமதி 12.32 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இறக்குமதி குறைவு
இதே ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் இறக்குமதியானது 23 சதவீதம் குறைந்து, 340.88 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
குறிப்பாக பிப்ரவரி 2021ல் எண்ணெய் இறக்குமதியானது 10.78 பில்லியன் டாலருக்கு எதிராக 8.99 பில்லியன் டாலராக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கிட்டதட்ட 17% சரிவாகும். இதே ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் எண்ணெய் இறக்குமதியானது 72.08 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 120.50 பில்லியன் டாலராக இருந்தது. இது 40.18% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பொருட்கள் இறக்குமதி அதிகரிப்பு
இதுவே எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதியானது பிப்ரவரி மாதத்தில் 31.56 பில்லியன் டாலராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் 27.12 பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது. இதே ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் இந்த எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதியானது 268.78 பில்லியன் டாலராகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 322.74 பில்லியன் டாலராகவும் இருந்தததாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது கிட்டதட்ட 17 சதவீதம் சரிவாகும்.
இந்த பொருட்கள் மட்டும் ஏற்றுமதி அதிகரிப்பு
இதே கடந்த பிப்ரவரி மாதத்தில் பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியானது 25.16 பில்லியன் டாலராக இருந்தது. இது பிப்ரவரி 2020ஐ விட 3.55% நேர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இதே பிப்ரவரியில் பெட்ரோலியம் அல்லாத மற்றும் ரத்தினங்கள் அல்லாத நகை ஏற்றுமதியின் மதிப்பு 22.48 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 21.28 பில்லியன் டாலராக இருந்தது. இதுவும் 5.65% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
என்னென்ன ஏற்றுமதி பொருட்கள்
கடந்த பிப்ரவரியில் நேர்மறையாக வளர்ச்சியினை பதிவு செய்த முக்கிய ஏற்றுமதி பொருட்களில், என்ணெய் உணவு, இரும்புத் தாது, அரிசி, இறைச்சி, பால் மற்றும் கோழி பொருட்கள், தரை விரிப்புகள், மசாலா, மருந்து மற்றும் இரசாயனங்கள் அடங்கும்.
எதிர்மறையான வளர்ச்சி
எனினும் பல ஏற்றுமதி பொருட்கள் ஒரே காலகட்டத்தில் எதிர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன. அவற்றில் பெட்ரோலிய பொருட்கள் - 27.13%, லெதர் -21.62%மும், முந்திரி ஏற்றுமதி -18.6%மும், ஜெம்ஸ் மற்றும் நகைகள் -11.18%மும், பொறியியல் பொருட்கள் -2.56%மும் டீ -2.49%மும், காபி -0.73%மும் வீழ்ச்சி கண்டுள்ளன.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications