ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மிக நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், ஏற்றுமதி சரிவினைக் கண்டுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி விகிதமானது உக்ரைன் பிரச்சனைக்கு முன்பை விட, 38% சரிவினைக் கண்டுள்ளது. அதேசமயம் இறக்குமதியானது 369% அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ரஷ்யாவுடனான வர்த்தக பற்றாக்குறை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
விரிவடைந்த வர்த்தக பற்றாக்குறை
கடந்த ஜூன் காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை என்பது 8.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டு முழுவதிலுமே 6.6 பில்லியன் டாலராக இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்றுமதி 0.4 பில்லியன் டாலராக இருந்த போதும், இறக்குமதி 9.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
செலவுகள் அதிகரித்துள்ளன?
சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் கொள்கலன் பற்றாக்குறையும் இருந்து வருகின்றது. இதனால் ஏற்றுமதி தாமதமாகி வருகின்றது. அதோடு முன்பை விட இன்சூரன்ஸ் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. மற்ற செலவினங்களும் அதிகரித்துள்ளன. இதனால் சிறியளவிலான ஏற்றுமதி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது.
பேமெண்ட் பிரச்சனை
மேலும் தற்போது பேமெண்ட் பரிவர்த்தனையிலும் சவால் நிலையே இருந்து வருகின்றது. இதுவும் ஏற்றுமதியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரிசர்வ் வங்கி ரூபாயில் பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுத்தது. எனினும் இதுவரையில் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதால், இதன் பலன் இன்னும் முழுமையாக ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கவில்லை எனலாம்.
வாய்ப்பிருந்தும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை
உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு ரஷ்யாவின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களிடம் பல்வேறு வகையான பொருட்களுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆர்வம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நல்ல வாய்ப்புகளை இந்தியாவினால் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழலே இருந்து வருகின்றது.
செலவு அதிகரிப்பு
இருப்பினும் இந்தியாவின் அத்தியாவசிய தேவையாக இருக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதே இத்தகைய நிலைக்கு காரணம் என்பதையும் மறுக்க முடியாது எனலாம். எனினும் ஷிப்பிங் செலவு, இன்சூரன்ஸ், கொள்கலன் என பல செலவுகளும் உயர்ந்துள்ளதால், அதன் பலனும் பெரியளவில் இந்தியாவுக்கு கிடைக்காமல் போகிறது.
இந்தியாவின் ஏற்றுமதி
எனினும் கடந்த ஜூன் காலாண்டில் ரஷ்யாவுக்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதியானது 19% அதிகரித்தும், அதனை தொடர்ந்து ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஏற்றுமதி 13% அதிகரித்தும் கேப்பிட்டல் குட்ஸ் 8% அதிகரித்துள்ளது, அதேசமயம் ரஷ்யாவில் இருந்து எரிபொருட்கள் இறக்குமதியானது 89% அதிகரித்துள்ளது.
More From GoodReturns

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications