அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலக நாடுகளில் இயங்கி வரும் முன்னணி முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி, நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்தியா பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளையில் புதன்கிழமை மத்திய அரசு 2023 ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி தரவுகளை வெளியிட்டது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் 6.1 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.1 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் அறிக்கை மோடி அரசாங்கத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரமாக மாறியுள்ளது. மோடி தலைமையிலான அரசின் கொள்கைத் தேர்வுகள் மூலம் 2014 முதல் இந்தியா எவ்வாறு வளர்ச்சியும் மாற்றங்களையும் சந்தித்துள்ளது என்பதை மார்கன் ஸ்டான்லி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா 2013 ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது வித்தியாசமாக உள்ளது, வெறும் 10 ஆண்டுகளில் மேக்ரோ எக்னாமி மற்றும் சந்தைக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உடன் முன்னணி பொருளாதார நாடுகள் மத்தியில் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
மார்கன் ஸ்டான்லி நிறுவனம் India Equity Strategy and Economics: How India Has Transformed in Less than a Decade என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் மோடி அரசு செய்த 10 பெரிய மாற்றங்களை இந்திய அரசின் கொள்கை மாற்றங்கள் வாயிலாக சாதிக்க முடிந்தது என தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சந்தை வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றிய 2014 ஆம் ஆண்டு முதல் செய்த 10 பெரிய மாற்றங்களை பட்டியலிட்டதை தொடர்ந்து கர்பரேட் வரியை உலக நாடுகளுக்கு இணையாக கொண்டு வந்தது, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியது ஆகியவற்றை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதோடு தொடர்ந்து அதிகரித்து வரும் ஜிஎஸ்டி வரி வசூல் மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் நிதி பரிமாற்றங்கள் ஆகியவை இந்திய பொருளாதாரத்தை வகைப்படுத்தியுள்ளது. இதேபோல் மானியங்கள நேரடியாக மக்கள் கணக்கில் செலுத்தியது, IBC CODE அறிமுகம், பணவீக்க இலக்கை இலகு தன்மை, FDI-யில் தனி கவனம், கார்பரேட் லாபம், ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய சட்டம் ஆகியவற்ரையும் முக்கியமான மாற்றமாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications