இந்தியாவில் கடந்த 2 மாதமாகக் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை நாட்டின் பல பகுதியில் குறைந்துள்ள நிலையில், உற்பத்தி மற்றும் சேவைத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக நாட்டில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொரோனாவுக்கு முன்பிருந்த அளவீட்டை கிட்டதட்ட அடைந்துவிட்டதாக முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் வர்த்தகத்தை இழந்த பல கோடி நிறுவனங்கள் அதிகளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தனர்.
இதனால் பல கோடி குடும்பங்கள் வருமானம் இல்லாத தங்களது அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவே கடன் வாங்க வேண்டி சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் தற்போது நாட்டில் வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது
குவெஸ் கார்ப்
இந்தியாவில் வேலைவாய்ப்பு சேவை வழங்கும் முன்னணி தனியார் நிறுவனங்களில் ஒன்றான குவெஸ் கார்ப்-ன் ஊழியர்கள் எண்ணிக்கை பிரதமர் மோடி திடீரென அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் இந்நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 55,000 சரிந்து 3,25,000 ஆகக் குறைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை அக்டோபர் மாதம் தான் முதல் முறையாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது எனக் குவெஸ் கார்ப் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு சந்தை
இந்திய வேலைவாய்ப்பு சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்து லாக்டவுன் காலத்தில் அறிவிக்கப்பட்ட மாபெரும் சரிவில் இருந்து மீண்டுள்ளது. இந்த வருடத்தின் முடிவிற்குள் லாக்டவுன் காலத்தில் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்ட சரிவில் இருந்து முழுமையாக மீளும் எனக் குவெஸ் கார்ப் நிறுவனத் தலைவர் அஜித் ஐசக் தெரிவித்துள்ளார்.
லாக்டவுன்
மோடி அறிவித்த லாக்டவுன் மூலம் நாட்டில் சுமார் 12.2 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழந்து வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதன் பின்பு பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமான நிலையை அடைந்து வருவதை உணர்ந்து மத்திய அரசு பலவேறு கட்டுப்பாடுகள் உடன் வர்த்தக நடவடிக்கை துவங்கியது.
வேலைவாய்ப்பு
இதன் பின்பு நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை வர்த்தகம் பெறத் துவங்கி செப்டம்பர் மாதத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.
இதனால் ஜூன் காலாண்டில் இருந்த -23.9 சதவீத பொருளாதார வீழ்ச்சி செப்டம்பர் காலாண்டில் பாதியாகக் குறைந்து -10 சதவீதம் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அளவீடு
இதேபோல் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்த நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.5 சதவீதம் வரையில் உயர்ந்தது. அக்டோபர் மாதம் இந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.98 சதவீதமாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications