2023 புத்தாண்டு பிறந்தது ஆனால் 2022 ஆம் ஆண்டு மிகவும் மோசமான நிலை உடன் முடிவடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ரூபாய் மதிப்பு, நடப்பு கணக்குப் பற்றாக்குறை, ஏற்றுமதி அளவுகள் சரிவு, உற்பத்தியில் மந்த நிலை, உள்நாட்டு தேவையில் பெரிய மாற்றம் இல்லாதது எனப் பல விஷயங்கள் மோசமானதாக மாறிய நிலையில் தற்போது டிசம்பர் மாதம் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு லட்சம், கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகக் கூறி வருவது மட்டும் அல்லாமல் வருடக் கணக்கில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் வருடம் முழுவதும் புதிய முதலீடுகளை ஈர்த்ததாகவும், இதன் மூலம் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 16 மாதம் உச்சத்தைத் தொட்டு உள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம்
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் டிசம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 8.30% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 16 மாதங்களில் இந்தியா எப்போது பார்த்திடாத அளவாக உள்ளது. இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டின் வல்லரசு நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையும் எனக் கணக்கிடப்பட்டு உள்ள வேளையில் டிசம்பர் மாதத்திலேயே 16 மாத உச்சத்தை வேலைவாய்ப்பின்மை அளவீட்டில் எட்டியது அதிர்ச்சி அளிக்கிறது.
டிசம்பர் மாத டேட்டா
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவு டிசம்பர் மாதத்தில் 8.30% உடன் 16 மாத உச்சத்தைத் தொட்டு உள்ள நிலையில் நவம்பர் மாதத்தில் 8.00% ஆக இருந்தது என்று இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவு ஞாயிற்றுக்கிழமை காட்டியது.
நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை
டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 8.30% ஆக இருந்த நிலையில், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.96% இல் இருந்து 10.09% ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.55% இல் இருந்து 7.44% ஆகச் சரிந்துள்ளது என்று CMIE தரவு காட்டுகிறது.
மக்கள் தொகையின் பங்கீடு
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வேலைவாய்ப்புச் சந்தைகளில் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் பங்கீடு 40.48 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மை அளவு நவம்பர் மாதத்தில் 8.00% அளவில் இருந்து டிசம்பர் மாதத்தில் 8.30% வரை உயர்ந்தது பெரிய பாதிப்பு இல்லை என CMIE அமைப்பின் தலைவர் மகேஷ் வியஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
இதற்கிடையில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவு டிசம்பர் மாதத்தில் 4.1 சதவீதமாக உள்ளது. நவம்பர் மாதம் இதன் அளவு 3.8 சதவீதமாகவும், அக்டோபர் மாதம் 3.3 சதவீதமாகவும், செப்டம்பர் மாதம் 4.1 சதவீதமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாதம் 6.9 சதவீதமாக உள்ளது.
பிற மாநிலங்கள்
ஒடிசா - 0.9 சதவீதம்
குஜராத் - 2.3 சதவீதம்
கர்நாடகா - 2.5 சதவீதம்
மேகாலயா - 2.7 சதவீதம்
மகாராஷ்டிரா - 3.1 சதவீதம்
மத்திய பிரதேசம் - 3.2 சதவீதம்
சத்தீஸ்கர் - 3.4 சதவீதம்
தமிழ்நாடு - 4.1 சதவீதம்
தெலுங்கானா - 4.1 சதவீதம்
உத்தரகாண்ட் - 4.2 சதவீதம்
உத்தரப்பிரதேசம் - 4.3 சதவீதம்
அசாம் - 4.7 சதவீதம்
புதுச்சேரி - 4.7 சதவீதம்
மேற்கு வங்காளம் - 5.5 சதவீதம்
பஞ்சாப் - 6.8 சதவீதம்
கேரளா - 7.4 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் - 7.6 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 7.7 சதவீதம்
கோவா - 9.9 சதவீதம்
சிக்கிம் - 13.6 சதவீதம்
திரிபுரா - 14.3 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 14.8 சதவீதம்
ஜார்கண்ட் - 18 சதவீதம்
பீகார் - 19.1 சதவீதம்
டெல்லி - 20.8 சதவீதம்
ராஜஸ்தான் - 28.5 சதவீதம்
ஹரியானா - 37.4 சதவீதம்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications