டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக இருந்தது என மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவு தெரிவிக்கிறது. முதன்முறையாக மத்திய அரசு இந்தியாவில் மாதாந்திர வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிட்டு இருக்கிறது.
மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 15 வயது மேற்பட்டவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக உள்ளது. இது ஆண்கள் மத்தியில் 5 .2% ஆகவும் பெண்கள் மத்தியில் 5% ஆகவும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5% என்ற அளவிலும் நகர்ப்புறங்களில் 6.5% என்ற அளவிலும் உள்ளது.

Periodic Labour Force Survey (PLFS) எனப்படும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் கீழ் Current Weekly Status (CWS) எனப்படும் வாராந்திர நிலவரத்தை எடுத்து இந்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை விகிதம் மற்றும் இந்தியாவின் வேலை வாய்ப்பு குறித்த நிலவரங்களை நிகழ் நேரத்தில் வெளிப்படையாக தெரிவிக்க அரசு முயற்சி செய்கிறது. இதனால் தான் சர்வதேச தரத்துக்கு இணங்க மத்திய அரசு முதன்முறையாக மாதாந்திர அறிக்கையை வெளியிட தொடங்கி இருக்கிறது.
இதற்கு முன்பு வரை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் மற்றும் ஆண்டுதோறும் என்ற அளவில்தான் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தரவுகளை வெளியிட்டு வந்தது. ஏப்ரல் மாதத்தில் தேசிய அளவில் Labour Force Participation Rate எனப்படும் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் என்பது 55.6% ஆக இருக்கிறது என அறிக்கை கூறுகிறது. கிராமப்புற இந்தியாவில் இந்த தொழிலாளர் பங்களிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் தொழிலாளர் பங்களிப்பு 58 % என்றும் நகர்புறங்களில் 50.7 % என்ற அளவிலும் இருக்கிறது.
ஆண்களை பொறுத்தவரை தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கிராம மற்றும் நகர்ப்புறம் என இரண்டிலுமே அதிகமாக இருக்கிறது. ஆண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கிராமப்புறங்களில் 79 % ஆகவும் நகர்புறங்களில் 75 % ஆகவும் இருக்கிறது. இதுவே பெண்கள் என வரும்போது கிராமங்களில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு 38.2 %ஆக மட்டுமே இருக்கிறது.
Worker Population Ratio எனப்படும் உழைக்கும் வயதில் இருக்கும் மக்களில் வேலைவாய்ப்பை பெற்றவர்களின் கணக்கீடு ஒட்டுமொத்தமாக நாட்டில் 52.8 % ஆக உள்ளது. கிராமப்புறங்களில் இது 55.4 %ஆகவும், நகர்ப்புறங்களில் 47.4 % ஆகவும் இருக்கிறது. மத்திய அரசு இனி மாதம்தோறும் இதுபோல மாதாந்திர வேலை வாய்ப்பின்மை விவரங்களை வெளியிட உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications