டெல்லி: நாட்டில் ஒரு புறம் கொரோனா வைரஸ் மக்களை வாட்டி வதைத்து வருகிறது எனில், மறுபுறம் பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மையானது மக்களை பலவகையிலும் வாட்டி வதைத்து வருகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் என்பது கடந்த 9 வாரங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 9.1% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆகஸ்ட் 9-வுடன் முடிவடைந்த மாதத்தில் 8.67% இருந்துள்ளது.
இதே கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதமும் புதிய உச்சத்தினை தொட்டுள்ளது. இதே ஜூன் 14-வுடன் முடிவடைந்த காலத்தில் 11.6% ஆக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம்
இது ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதமானது 7.43% ஆக அதிகமாக இருந்தது. இதே ஆகஸ்ட் 9-வுடன் முடிவடைந்த வாரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதமானது 8.37% இருந்துள்ளது. இதே ஆகஸ்ட் 16 வாரத்தில் 8.86% ஆக உயர்ந்தது. விவசாய நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக பிரச்சனை காரணமாகவும், வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
கொரோனாவால் தொழில்துறை முடக்கம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் நடவடிக்கைகள் முடங்கின. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் பின்னடைவைச் சந்தித்தது. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளும் குறைந்தன. இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது என்னவாகுமோ என்ற பய உணர்வும் எழுந்தது.
வேலையில்லா திண்டாட்டம்
இதன் காரணமாக தொழில் நிறுவனங்களின் வருவாய் குறைந்து, வேலை வாய்ப்புகளிலும் பின்னடைவு ஏற்பட்டது. இதனாலேயே இந்தியாவில் கடந்த 9 வாரங்களில் இல்லாத அளவு புதிய உச்சமாக 9.1% வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் முந்தைய நிலவரம்
இது தொடர்பாக இந்திய பொருளாதார கண்காணிக்கும் மையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூலை 12-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.34 சதவீதமாக சரிந்தது, ஆனால் அது மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 17.92 சதவீதமாக இருந்தது, மேலும் ஜூலை 19-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.10% ஆகவும், அடுத்த வாரத்தில் 7.66% ஆகவும் மாறியது.
வேலையின்மை விகிதம்
ஆனால் ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.47% ஆக குறைந்தது. தற்போது கிராமப்புற வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.86% ஆக மீண்டும் அதிகரித்து வருகிறது. நகர்ப்புற இந்தியாவில், வேலையின்மை விகிதம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 25.14 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.73 சதவீதமாகக் குறைந்து வருகிறது.
இதுவும் அப்படி தான்
ஆனால் அதன் பின்னர் ஆகஸ்ட் 9-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.31% ஆகவும், ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.61% ஆகவும் அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 23.5% ஆக இருந்த இந்தியா வேலையின்மை விகிதம் முதலில் ஜூன் முதல் வாரத்தில் 17.51% ஆகக் குறைந்தது, பின்னர் அது இரண்டாவது வாரத்தில் 11.6% ஆக சரிந்தது.
சிஎம்ஐஇ அறிக்கை
இது ஜூலை மாதத்தில் 7.4% ஆக குறைந்தது, இது 2019-20 முழுவதும் சராசரி வேலையின்மை விகிதமான 7.6% ஐ விடக் குறைவாகும். ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது 7.19% ஆக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது மீண்டும் 8.67 சதவீதமாகவும், ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.1 சதவீதமாகவும் மீண்டும் அதிகரித்துள்ளது என சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications