இந்தியாவின் வாகன உற்பத்தியாளர்கள், பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கினால் தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அப்படியானால் பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்து அதற்கு பதிலாக புதிய வாகனம் வாங்கினால், புதிய வாகனத்தின் விலையில் தள்ளுபடியுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
இது போன்ற விஷயங்கள் சுற்றுச்சூழலை கணிசமாக முன்னேற்றும், சாலைகளில் சுத்ததைப் பராமரிக்கவும் மற்றும் பாதுகாப்பான வாகனங்கள் இருப்பதை உறுதி செய்யும்" என்று நிதின் கட்கரி ட்வீட் செய்துள்ளார். இந்த முடிவு புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வாகன வகைகளின் தள்ளுபடியின் அளவு 1.5% முதல் 3% வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சில குறிப்பிட்ட மாடல்களில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தாமாக முன்வந்து கூடுதல் தள்ளுபடிகளையும் வழங்க முடியும்.
ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனத்தின் விவரங்கள் வாகன் இணையதளத்தில் இணைக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வாகனம் எக்ஸ்சேஞ்ச் செய்யப்படாமல் ஸ்கிராப் மட்டும் செய்யப்பட்டால், ஸ்கிராப்பேஜ் தள்ளுபடி மட்டுமே வழங்கப்படும்.
கமர்சியல் வாகன உற்பத்தியாளர்கள் 2 ஆண்டுகள் வரை தள்ளுபடி வழங்க தயாராக உள்ளதாகவும், மேலும் பாசஞ்சர் வாகன உற்பத்தியாளர்கள் 1 ஆண்டு வரை குறுகிய தள்ளுபடி வழங்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 2021-ஆம் ஆண்டு, பழைய மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்காக தேசிய வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை இந்தியா அறிமுகப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக, மாநிலங்கள் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்த பிறகு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு 25% வரி தள்ளுபடி வழங்கின.
வாகன ஸ்கிராப் கொள்கையின் கீழ், பாசஞ்சர் வாகனத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் மற்றும் கமர்சியல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகள்.
அறிக்கையின்படி, கார் தயாரிப்பாளர்கள் கடந்த 6 மாதங்களில் உரிமையாளரால் ஸ்கிராப் செய்யப்பட்ட பயணிகள் வாகனத்திற்கு எதிராக புதிய காரின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 1.5% அல்லது ரூ. 20,000 அல்லது குறைவாக தள்ளுபடி வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications