இந்திய மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு.. மொத்த விலை பணவீக்கம் 1.89 சதவீதமாக உயர்வு!

இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 1.89 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பணவீக்க விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக கடந்த ஆண்டு பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது குறைந்துள்ளதாக அரசாங்கம் திங்கட்கிழமை அன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தவிலை பணவீக்க விகிதம் கடந்த மாதம் ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பொருளாதார வல்லுநர்கள் அறிவித்த 2.2 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளது. மேலும் அக்டோபரில் நான்கு மாத உயர்வான 2.36 சதவீதத்திலிருந்து தற்போது 1.89 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விலை பணவீக்கம் என்பது உற்பத்தியாளர்கள் பொருட்களை வியாபாரிகளுக்கு விற்கும் விலையின் சரிவை குறிக்கிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அளவிட பயன்படுத்தப்படும் முக்கிய குறியீடாகும்.

 இந்திய மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு.. மொத்த விலை பணவீக்கம் 1.89 சதவீதமாக உயர்வு!


நவம்பர் மாதம் உணவு விலைகள் 8.92 சதவீதம் வரை அதிகரித்தது. அக்டோபர் மாதத்தில் அதைவிட உயர்வாக 11.6 சதவீதமாக இருந்தது. காய்கறிகளின் விலை கடந்த நவம்பர் மாதம் 28.57 சதவீதம் உயர்ந்திருந்தது. அதோடு ஒப்பிடுகையில் இந்த நவம்பர் மாதத்தில் 63 சதவீதம் வரை குறைந்துள்ளது.

மொத்த விலை குறியீட்டில் 64 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இது அக்டோபர் மாதத்தில் இருந்த 2 சதவீதத்திலிருந்து நவம்பர் மாதத்தில் 1.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல எரிபொருளின் விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5.83 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.

மொத்த விலை பணவீக்கம் மட்டுமின்றி சில்லறை பணவிக்க விகிதமும் நவம்பர் மாதத்தில் 5.48 சதவீதமாக குறைந்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் சில்லரை பணவிக்க விகிதம் 6.21 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பரில் குறைந்த காணப்பட்டது. முக்கியமாக உணவுப்பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை குறைந்ததன் காரணமாக இந்த பணவீக்கம் விகிதம் குறைந்துள்ளது. நுகர்வோர் விலை குறியீடு நவம்பர் மாதத்தில் 9.04 சதவீதமாக குறைந்துள்ளது. இது அக்டோபர் மாதம் 10.87 சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டிற்கும் பணவீக்க விகிதம் குறித்து முன்னரே நிர்ணயித்து அறிவிப்பை வெளியிடும். அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் காரணமாக இந்த டிசம்பர் காலாண்டில் பணவீக்க விகிதம் உயரக்கூடும் என்பதனால்.. இந்த விகிதத்தை 4.5 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது. தற்போது பணவீக்க விகிதம் குறைவாக இருந்தாலும், இனி வரும் காலங்களில் இந்த விகிதம் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+