அக்டோபர் 14-ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மொத்த விலை குறியீட்டு (WPI) தரவுகளின் படி, 2024-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 1.84 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 1.31 சதவீதமாக இருந்தது. அதேபோல ஜூலை மாதத்தில் 2.04 சதவீதமாக இருந்தது.
உணவுப் பொருட்களின் துறை, உற்பத்தி பொருட்கள் துறை, மோட்டார் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற முக்கிய துறைகளால் செப்டம்பர் மாத பணவீக்கம் உயர்ந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வுகள் ஒட்டுமொத்த பண வீக்கத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தியுள்ளன.

WPI என்றால் என்ன?: WPI பணவீக்கத்தை அளவிடுவதற்காக பயன்படும் ஒரு குறியீடாகும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் மொத்தமாக விற்பனையாகும் பொருட்களின் விலை மாற்றங்களை கண்காணித்து இந்த WPI கணக்கிடப்படுகிறது. இது நுகர்வோர் விலை குறியீடு (CPI) கிடையாது. ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உற்பத்தியாளர்கள் விநியோகஸ்தர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை WPI மதிப்பிடுகிறது. CPI சில்லறை விலைகளை பிரதிபலிக்கிறது. அதாவது நாம் கடைகளுக்கு சென்று வாங்கும் பொருட்களின் விலை குறியீடு.
2024-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் கனிமங்கள் 1.83 சதவீதம் அதிகரித்துள்ளன, உணவு அல்லாத பொருட்கள் 1.31% அதிகரித்துள்ளன, உணவுப் பொருட்கள் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளன. கூடுதலாக இந்த மாதம் மின்சார கட்டணங்கள் 1.34% வரை உயர்ந்துள்ளது.
ஆனால் சில துறைகளில் விலை சரிவு ஏற்பட்டது. உதாரணமாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விலை 5.74 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மினரல் ஆயிலின் விலை 1.72 சதவீதம் குறைந்துள்ளது. இந்த சரிவுகள் மொத்த பண வீக்கத்தின் அதிகரிப்பை குறைக்க உதவியுள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்கள், உற்பத்தி துறைகள், உலோகம் அல்லாத கனிமப் பொருட்கள், கணினி, ஆடை ஆகியவற்றில் விலை அதிகரிப்பு இருந்தது. மறுபுறம் அடிப்படை உலோகங்கள், மோட்டார் வாகனங்கள், ரசாயனங்கள் போன்ற துறைகளில் விலை குறைவு ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத பணவீக்க உயர்வுக்கு உணவு மற்றும் உற்பத்தி விலை உயர்வு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பருவ கால சவால்களால் உணவு துறையில் மேல்நோக்கிய போக்கு ஏற்பட்டுள்ளது. மொத்த விலை உயர்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணவுப்பொருட்கள் துறை செய்துள்ளது. இதற்கு நேர் மாறாக கச்சா எண்ணெய், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்ற சில பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவு பணவீக்க அதிகரிப்புக்கு எதிராக செயல்பட்டு மொத்த விலை பணவீக்கம் அதிகரிக்காமல் தடுத்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications