வரலாற்று உச்சத்தில் சர்க்கரை விலை.. எத்தனால் உற்பத்தியால் வந்த புது பிரச்சனை..!

இந்திய மக்கள் மத்தியில் முக்கிய நுகர்வு பொருளாக இருக்கும் சர்க்கரை விலை வரலாறு காணாத உச்ச விலையை தொட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் எம் கிரேட் சர்க்கரையின் விலை ஒரு குவின்டாலுக்கு 5400 ரூபாய் விலையில் தொழிற்சாலையில் விற்கப்படுகிறது. இதுவே மொத்த விற்பனை சந்தையில் 5800 ரூபாய் வரையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி விற்கப்பட்டு அதிர்ச்சி கொடுத்தது. இதை தான்டி 5 சதவீத ஜிஎஸ்டியும் இருக்கிறது.

இதைவிட முக்கிய பிரச்சனை என்னவென்றால் சர்க்கரை விலை இனி வரும் நாட்களில் அதிகளவில் உயரும் என்பது தான். இதை மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

வரலாற்று உச்சத்தில் சர்க்கரை விலை.. எத்தனால் உற்பத்தியால் வந்த புது பிரச்சனை..!

சர்க்கரை விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக எத்தனால் தான். இந்தியாவில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும், இதேவேளையில் மக்களுக்கு தேவையான சர்க்கரையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு முன்கூட்டியே எல் நினோ பிரச்சனையை உணர்ந்து அனைத்து விதமான சர்க்கரைக்கும் மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30, 2026 வரையில் ஏற்றுமதி தடையை விதித்தது.

ஆயினும் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி குறைவாக இருக்கிறது, இதற்கு முக்கிய காரணம் கருப்பு மற்றும் அதன் சர்க்கரை தொடர்பான பொருட்களில் பெரும் பகுதி எத்தனால் உற்பத்திக்காக சென்றுள்ளது. இதனால் உற்பத்தி குறைந்து, சப்ளை தடைபெற்று விலை உயர்ந்துள்ளது.

அரசும், சர்க்கரை நிறுவனங்களும் அதிகப்படியாக எத்தனால் உற்பத்திக்கு முக்கியதுவம் கொடுத்த காரணத்தால் சர்க்கரை உற்பத்தி குறைந்து விலை உயர்ந்துள்ளது. தற்போது விலை உயர்வை லாபமாக்கும் முயற்யில் சர்க்கரை ஆலைகள் தங்களுடைய உற்பத்தியை சர்க்கரைக்கு திருப்பி விட முடிவு செய்துள்ளது.

இதேவேளையில் தொழிற்துறையினர் B-heavy molasses-ஐ எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கட்டுப்பாட்டை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த சில வாரங்களில் சர்க்கரை விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

C molasses காட்டிலும் B-heavy molasses-ல் அதிக சர்க்கரை இருக்கும் காரணத்தால் இதன் மூலம் அதிக எத்தனால் பயன்படுத்த முடியும், கிட்டத்தடட் 25 சதவீதம் அதிக உற்பத்தியை பார்க்க முடியும் என்பதால் எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தும் B-heavy molasses-ஐ அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சர்க்கரை விலை உயர்வு குறித்து பல்ராம்பூர் சீனி மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் விவேக் சாரகி கூறுகையில் சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்திக்கு மத்தியில் சமநிலையை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

தற்போது சர்க்கரை இருப்பு நாட்டில் மிகவும் குறைவாக உள்ளது, மேலும் இது பண்டிகை காலம் என்பதால் இதற்கான டிமாண்ட் சற்று அதிகமாகவே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் B-heavy molasses அல்லது கருப்பு சாறு-ஐ எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிட அரசுக்கு அவசியமில்லை எனவும் விவேக் சாரகி விளக்கம் கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+