கொரோனா தொற்றின் முதல் அலையில் ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்தாத காரணத்தால் நாடு முழுவதும் பரவியது, 2வது கொரோனா தொற்று ஏற்படும் என்பது முன்கூட்டியே தெரிந்தும் முழுமையாகத் தயாராகாமல் இருந்த காரணத்தால் தற்போது நாட்டில் லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளது, பல ஆயிரம் மக்கள் கொரோனா தொற்று மூலம் மரணம் அடைந்துள்ளனர்.
இதனால் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளனர். அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினரும், பெண்களுக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக EPFO அமைப்பு தனது தரவுகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் பல விதமான பிரச்சனைகளைச் சந்தித்துள்ளனர், சொல்லப்போனால் மக்கள் தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு ஆண்டாக மாறிவிட்டது 2020-21ஆம் நிதியாண்டு.
அதிகப் பாதிப்பு
2020-21ஆம் நிதியாண்டின் துவக்கத்திலேயே லாக்டவுன், வர்த்தகப் பாதிப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் குறைந்தது, கொரோனா தொற்று, மருத்துவமனையில் அதீத கட்டணம், வருமானம் சரிவு, வாழ்வாதாரம் பாதிப்பு..
இளம் தலைமுறையினருக்கு அதிகப் பாதிப்பு
இப்படி அடுத்தடுத்து மக்களை வாட்டிவதைத்து வரும் கொரோனா 25 வருடத்திற்குக் குறைவாக இருக்கும் நாட்டின் இளம் தலைமுறையினரைப் பெரிய அளவில் பாதித்துள்ளதாக EPFO தரவுகள் கூறுகிறது.
வேலைவாய்ப்பு இழப்பு
கொரோனா தொற்றுக் காலத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்ட பல லட்சம் இளம் தலைமுறையினர் திரும்பவும் வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்குக் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பும், லாக்டவுன் அறிவிப்பும் முக்கியக் காரணம்.
3 முக்கியப் பிரிவுகள்
ஊழியர்கள் அமைப்பான EPFO அமைப்பு 2020-21ஆம் நிதியாண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் 18 வயதுக்குக் கீழ், 18 முதல் 21 வயது, 22 முதல் 25 வயது பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 19%, 15.6% மற்றும் 4.2% தத்தம் குறைந்துள்ளது. மற்ற பிரிவுகளில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாத சம்பள ஊழியர்கள் எண்ணிக்கை
இதேவேளையில் நாட்டின் மொத்த மாத சம்பள ஊழியர்கள் எண்ணிக்கையில் 12.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. சருக்கமாக 2019-20ல் 85.9 மில்லியனாக இருந்த மாத சம்பள ஊழியர்கள் எண்ணிக்கை ஏப்ரல் 2021 முடிவில் 73.3 மில்லியனாக உள்ளது.
ஈபிஎப்ஓ அமைப்பு
மாதம் சம்பள ஊழியர்கள் என்பது ஒரு நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக இருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்குவோர்கள் மட்டுமே. அப்படி நிரந்தர ஊழியராக இருக்கும் அனைவருக்கும் மாதம் தவறாமல் பிஎ பணம் செலுத்தியாக வேண்டும், இதன் மூலம் ஈபிஎப்ஓ அமைப்பு எளிதாக நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கையை எளிதாகக் கணக்கிட முடியும்.
ஃபிரஷ்ஷர்களுக்கு வேலைவாய்ப்பு
18 வயதுக்குக் கீழ், 18 முதல் 21 வயது, 22 முதல் 25 வயது பிரிவுகளில் இருக்கும் ஊழியர்கள் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள். கொரோனா தொற்றுக் காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டியிருக்கும் காரணத்தால் ஃபிரஷ்ஷர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகிறது. இதன் எதிரொலியே தற்போது இந்த 3 பிரிவுகளில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள்.


Click it and Unblock the Notifications