உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் வீடியோ கண்டென்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு ஏற்றார் போல் இப்பிரிவில் அதிகப்படியான வருமானம் ஈட்டும் வழிகளும் உருவாகியுள்ளது.
இதனாலேயே பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தங்களது இளம் வயதிலேயே முழுநேர கண்டென்ட் கிரியேட்டர்களாக மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் அனைவரும் இத்துறையில் வெற்றி அடைய முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது..
இந்த நிலையில் கண்டென்ட் கிரியேட்டர்கள் குறித்து முக்கியமான டேட்டா தற்போது வெளியாகியுள்ளது.இந்த தரவுகள் மூலம் ஒட்டுமொட்ட வீடியோ கிரியேட்டர்களும் மகிழ்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் பெருமை அடைந்து உள்ளனர்.
6800 கோடி ரூபாய்
இந்தியாவில் யூடியூப் வீடியோ கண்டென்ட் கிரியேட்டர்கள் மூலம் நாட்டின் ஜிடிபி-க்கு சுமார் 6800 கோடி ரூபாய் அளவிலான பங்களிப்பையும், வேலைவாய்ப்புச் சந்தையில் சுமார் 7 லட்சம் பேருக்கும் வாய்ப்பு அளித்துள்ளது. இந்தத் தரவுகளைக் கூகுள் நிறுவனத்தின் உயர் துணை தலைவர் மற்றும் யூடியூப் சீஃ ப்ராடெக்ட் ஆபீசர் நீல் மோகன் CyFy2022 மாநாட்டில் தெரிவித்தார்.
நீல் மோகன்
இக்கூட்டத்தில் நீல் மோகன் யூடியூப் ஒரு கிரியேட்டர் தனக்கான ரசிகர்களைச் சேர்ப்பதுக்கு மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தகத்தை உருவாக்குவதற்கும் பயன்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
சிறிய கிரியேட்டர்கள், சிறிய வர்த்தகங்கள்
மேலும் யூடியூப்-ல் பெரிய நிறுவனங்கள் மட்டுமே தான் அதிகப்படியான வளர்ச்சி அடையும் என்ற நிலை இல்லை, அனைத்துத் தரப்பு கிரியேட்டர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும், குறிப்பாகச் சிறிய கிரியேட்டர்கள், வர்த்தகங்கள் யூடியூப் மூலம் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அரசு கண்காணிப்பு
யூடியூப் அனைவருக்குமான தளமாக இருக்கும் நிலையில் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதே எங்களின் அடிப்படை பணியாக உள்ளது. யூடியூர் பல கோடி மக்களை நேரடியாகப் பாதிக்கும் காரணத்தால் இத்தளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அரசு கண்காணிப்பது இயற்கையானது எனவும் நீல் மோகன் பேசியுள்ளார்.
புகழும், பணமும்..
யூடியூப் வீடியோ கிரியேட்டர்கள் சார்ந்து பல பிரச்சனைகள் அவ்வப்போது எழுந்தாலும் இந்திய வேலைவாய்ப்பு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் யூடியூப் வீடியோ கிரியேட்டர்களாக மாற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் பின்பற்றுவோர் அடைந்த புகழும், பணமும் தான்..
பெற்றோர்கள் ஆதரவு
தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற யூடியூப் வீடியோ கிரியேட்டர்கள் அதிகமானோர் உள்ளனர், இவர்களின் வெற்றி பாதை பலருக்கும் வியப்பு அளிக்கும் நிலையில் இன்றைய இளம் பெற்றோர்களும் விருப்பமுள்ள பிள்ளைகளுக்கு இப்பிரிவில் கரியரை அமைக்க ஆதாரவு அளிக்கின்றனர். சொல்லப்போனால் இந்தியாவின் யூடியூப் பயணத்தில் இது தான் துவக்கம்.
பில்லியனர் யூடியூப் கிரியேட்டர்கள்
ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்புடன் பல யூடியூப் வீடியோ கிரியேட்டர்கள் உள்ளனர், இந்தியாவில் இப்போது தான் மில்லியன் இலக்கை சிலர் எட்டியுள்ளனர். இந்தியாவில் ஒரு பில்லியனர் யூடியூப் வீடியோ கிரியேட்டர்கள் கூட இதுவரை இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications