மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருடம் முழுவதும் கடினமாக உழைக்க முக்கிய காரணம், வருடத்தின் இறுதியில் கிடைக்கும் அந்த சம்பள உயர்வுக்காகத் தான். ஆனால் சமீப காலமாக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், பொருளாதார வளர்ச்சியில் உருவாகியுள்ள தடுமாற்றங்களும் பல நிறுவனங்களின் நிதி நிலையை மோசமாக்கியுள்ளது.
இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள உயர்வைக் குறைத்தும், பல இடங்களில் சம்பள உயர்வை மறுத்தும் உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் வேரியபிள் பே மற்றும் போனஸ் தொகைகளை மறுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு இந்திய நிறுவனங்களில் சம்பள உயர்வை எந்த அளவுக்குக் கொடுக்கும் என்பது குறித்து மனிதவள ஆலோசனை நிறுவனமான ஓமாம் ஒரு ஆய்வை செய்துள்ளது.
ஒரு வருடத்தில் நிறுவனங்கள் எந்த அளவுக்கு புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கிறது, பணிநீக்க திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறதோ, இதேபோல் சம்பள உயர்வு எந்த அளவுக்குக் கொடுக்கப்படும் என்பதை துறை வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற ஒரு ஆய்வை தான் OMAM நிறுவனம் செய்துள்ளது.
இந்நிறுவனம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, இந்திய நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சராசரி சம்பள உயர்வு 8.9 சதவீதமாக இருக்கும், இது கடந்த ஆண்டின் 9.1 சதவீதத்தைவிடக் குறைவாகும். அதே நேரத்தில் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறும் விகிதம் 13.6 சதவீதமாகவே தொடரும் என்றும் இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
இந்த அளவீடுகள் அனைத்து துறைகளின் சராசரி அளவீடாகும். மேலும் பொருளாதார நிச்சயமின்மை, துறை வாரியான மந்த நிலை, திறமை வாய்ந்த ஊழியர்களுக்கு மட்டும் அதிக சம்பளம் என்ற போக்கு தான் குறைவான சம்பள உயர்வுக்குக் காரணம் என்று ஓமாம் நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
துறை வாரியாக பார்க்கும் போது ஐடி துறையில் சம்பள உயர்வு 2025இல் இருந்த 8.2 சதவீதம் 2026இல் 7 சதவீதமாகக் குறையும் என்று இந்த ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இ-காமர்ஸ் துறையில் 10 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாகவும், எஃப்எம்சிஜி மற்றும் எஃப்எம்சிடி துறைகளில் 9.5 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் 10.5 சதவீதத்தில் இருந்து 9.8 சதவீதமாகச் சரியும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்தத் துறைகளில் பொருளாதார மந்த நிலையும், உலகளாவிய தேவையில் ஏற்பட்ட சரிவும் தான் சம்பள உயர்வைக் குறைந்துள்ளது.
நுகர்வோர், ஐடி சேவை துறையைத் தாண்டி, உற்பத்தித் துறைகளிலும் சம்பள உயர்வு குறைவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது கூடுதல் அச்சத்தைக் கொடுக்கிறது. கோர் உற்பத்தி தொழில்துறையில் சம்பள உயர்வு கடந்த ஆண்டு பதிவான 9 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கெமிக்கல் துறையில் 9.5 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் குறையும் என்று ஓமாம் அறிக்கை கூறுகிறது. இந்திய நிறுவனங்கள் செலவைக் குறைக்கவும், லாபத்தை அதிகரித்துக் காட்டவும் சம்பள உயர்வைக் குறைத்து வருகின்றன. இதனால் பெரும்பாலான ஊழியர்களுக்குக் குறைவான சம்பள உயர்வே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால் ஒரு சில சில துறைகளில் மட்டும் சம்பள உயர்வு நிலையாகவோ சற்று அதிகமாகவோ இருக்கும் எனவும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. இப்படி அதிர்ஷ்டம் நிறைந்த துறைகளில் காப்பீடுத் துறையில் முதன்மையாக உள்ளது. இத்துரையில் கடந்த வரும் நடைமுறையில் இருந்த 9 சதவீத சம்பள உயர்வு, 2026லும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்புத் துறையில் 9 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக உயரும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
இதனால் நல்ல சம்பளம், சிறந்த வேலை சூழல் தேடி ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவது அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது, ஆனால் அட்ரிஷன் அளவில் மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் நிறுவனங்கள் திறமையான ஊழியர்களைத் தக்க வைக்க கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். 2026இல் சம்பள உயர்வு குறைவாக இருந்தாலும், திறமை வாய்ந்த ஊழியர்களுக்கு மட்டும் அதிக சம்பளம் என்ற போக்கு தொடரும் என்று இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications