ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த 28ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வரக்கூடிய கப்பல்கள் கடந்து வருவதற்கான ஒரே வழி இந்த ஹார்முஸ் ஜலசந்திதான். ஈரான் இதனை மூடி இருப்பதால் வளைகுடா நாடுகளில் ஏராளமான கச்சா எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளன. கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு தேவையான 60%க்கும் அதிகமான கச்சா எண்ணெய் நாம் இந்த ஹார்மோன் ஜலசந்தி வழியாக தான் பெற வேண்டி இருக்கிறது.

தற்போது இங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. தடையை மீறி ஏதேனும் கப்பல் இந்த பாதையை கடந்தால் தகர்ப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதியும் முன்னெச்சரிக்கையாகவும் எண்ணெய் நிறுவனங்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கின்றன. இதனால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து குறைந்து இருக்கிறது.
அண்மையில் தான் இந்தியா ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தையும் குறைத்தது. இதற்கிடையே இந்த போர் பதற்றம் இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வருகையை சரிவடைய செய்திருக்கிறது. கச்சா எண்ணெய் வரத்து குறைந்தது , உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தது ஆகியவை பெரும் நெருக்கடியை தந்துள்ளன.

மற்றொருபுறம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 92 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது. அதாவது இந்தியா டாலரை கொடுத்து தான் கச்சா எண்ணை வாங்க வேண்டும் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது இதை வாங்குவதற்கான டாலரை வாங்க இந்தியா இன்னும் அதிகமாக ரூபாயை செலவு செய்ய வேண்டும். இது பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இந்த நெருக்கடியை எண்ணெய் நிறுவனங்கள் சாமானிய மக்கள் மீது சுமத்துமா, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த சூழல் தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகங்கள் சார்பாக ஆலோசனை நடைபெற்றது. அப்போது இந்தியாவின் ஏற்றுமதி சூழல், வர்த்தகம் குறிப்பாக கச்சா எண்ணெய் போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்தியாவில் தற்போது 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாகவும், கச்சா எண்ணெய், எல்பிஜி , மற்றும் எல்என்பி ஆகியவற்றை ஹார்முஸ் ஜலசந்தி இல்லாமல் வேறு மூலங்களிலிருந்து கொள்முதல் செய்வது குறித்து அரசு ஆய்வு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருக்கும் நிலையில் அரசு சாமானிய மக்களுக்கு தொடர்ச்சியாக தற்போதுள்ள விலையிலேயே பெட்ரோல், டீசல் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பெட்ரோல் டீசல் விலை உயரும் என்ற அச்சம் தற்போதைக்கு மக்களுக்கு தேவையில்லை என சொல்லப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேரடியாகவே கோடிக்கணக்கான சாமானிய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கான செலவு அதிகரிக்கும் என்பதால் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துவிடும்.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

Israel ரத்த வெள்ளம், Iran குறிவைத்த அணுசக்தி தளம்! முடங்கிய Iron Dome - அதிர்ச்சியில் நெதன்யாகு சொன்ன வார்த்தை

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!



Click it and Unblock the Notifications