கோடை கால விடுமுறை காரணமாக இந்தியாவில் மே மாதத்தில் பெட்ரோல் விற்பனை மே மாத முதல் பாதியிலேயே 10 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மே 16ஆம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலில் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரையிலான முதல் 15 நாட்களில் பெட்ரோல் விற்பனை 10% அதிகரித்து இருப்பதாக தெரிவித்து ள்ளது. மே மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும் காலம், அதுமட்டுமின்றி பள்ளி கல்லூரிகளிக்கு ஒரு மாத காலம் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காரணமாக நாடு முழுவதும் பலரும் தங்களின் சொந்த ஊர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவும் செல்கின்றனர். இதன் காரணமாக நாட்டில் பெட்ரோல் பயன்பாடு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெட்ரோல் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தின் முதல் பாதியில் 1.37 மில்லியன் டன்கள் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1.5 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது.
இதுவே 2023 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை 1.36 மில்லியன் டன்களாக இருந்தது. டீசல் விற்பனை இரண்டு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மே 1 முதல் மே 15 ஆம் தேதி வரை 3.36 மில்லியன் டன்கள் டீசல் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டீசல் விற்பனை என்பது 8.23 மில்லியன் டன்களாக இருந்தது என்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதம் டீசல் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே போல விமான எரிபொருள் விற்பனையும் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. மே 1ஆம் தேதியிலிருந்து மே 15ஆம் தேதி வரை விமான எரிபொருள்களுக்கான விற்பனையும் 1.1% என அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது எதிர்பார்த்த அளவு உயரவில்லை. மே 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை 3, 27, 900 டன்கள் விமான எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 1.1% அதிகமாகும்.
பாகிஸ்தான் உடனான மோதலை தொடர்ந்து பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டதே இதற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது. அதே வேளையில் எல்பிஜி பயன்பாடு 10.4% அதிகரித்து இருக்கிறது. மே 1ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை 1.34 மில்லியன் டன்கள் எல்பிஜி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications