வரி வருமானமாக 1 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2013 முதல் 2014-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் 44,078 பேராக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.3 லட்சமாக உயர்ந்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், தாக்கல் செய்யப்பட்ட ITR-கள் 3.3 கோடியிலிருந்து 7.5 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக, வரித் துறையின் சமீபத்திய தரவுகள் தெரிவிகின்றன.
ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2022 முதல் 2023-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் 49.2 சதவீதமாக இருந்தது மற்றும் 2013 முதல் 2014-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் 51 சதவீதமாக இருந்தது.

ரூ.1 கோடி முதல் ரூ. 5 கோடி ரூபாய் வருமான பிரிவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை 53 சதவீதமாக உள்ளது. அதிக வருமான பிரிவுகளில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அதிகம்.
ஆண்டு வரி வருமானமாக ரூ.500 கோடி ரூபாய்க்கு மேல் பெரும் 23 பேரில் யாரும் சம்பளம் பெறுபவர்கள் இல்லை, அதேசமயம் ரூ.100 முதல் ரூ.500 கோடி ரூபாய் பிரிவில் உள்ள 262 பேரில் 19 பேர் சம்பளதாரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 முதல் 2014-ஆம் ஆண்டில், ஒருவர் மட்டுமே ரூ.500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவராக இருந்தார். அதேசமயம் 2 பேர் ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி ரூபாய் பிரிவில் இருந்தனர். 25 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2022 முதல் 2023-ஆம் ஆண்டில் 1,812-லிருந்து கடந்த மதிப்பீட்டு ஆண்டில் 1,798 ஆக குறைந்துள்ளது.
கடந்த 1 வருடத்தில் இந்தியா ஒவ்வொரு 5 நாட்களுக்கும் ஒருமுறை ஒரு புதிய பில்லியனரை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 300-ஐத் தாண்டியுள்ளது.
2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின் படி, இந்தியா இப்போது 334 பில்லியனர்களைக் கொண்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில், பணக்காரர்களின் பட்டியலில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு 95 ஆக இருந்தது மற்றும் பட்டியல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது வெறும் 10 ஆக இருந்தது. இதிலிருந்து இந்தியாவில் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நாட்டில் பில்லியனர்கள் அதிகரிப்பதும் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications