கடும் வெயிலின் தாக்கத்தால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், 70 சதவீத வீடுகளில், வாரத்திற்கு காய்கறி செலவுகள் மட்டும் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, LocalCircles நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விலை ஏற்றம் காரணமாக சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரத்திலேயே, மூன்றில் இரண்டு சதவீத நுகர்வோர் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.30-லிருந்து ரூ.50-க்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். சில மாநிலங்களில் கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் காய்கறிகள் விதைப்பதற்கு முக்கியமான ஜூலை மாதத்தில் போதிய பருவமழை பெய்யா விட்டாலோ அல்லது அதிக மழைப்பொழிவு காய்கறி சாகுபடியை பாதித்தாலோ காய்கறி விநியோகம் மற்றும் விலைகளில் மாற்றம் ஏற்படும்.

இந்த விலை ஏற்றத்தைத் தடுக்க உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று இந்த கணக்கெடுப்பு பரிந்துரைக்கிறது. மேலும், மிக அதிக விலையில் காய்கறிகள் விற்கப்படும் மாவட்டங்களில் காய்கறிகளை மானிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நுகர்பொருள் துறை அமைச்சகம் (NCCF) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக காய்கறி விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளது. உணவு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கும் இறக்குமதி வரிகளை குறைப்பதற்குமான நடவடிக்கைகள் அவ்வளவு பலனளிக்கவில்லை. கோடை காலத்தில் பொதுவாக காய்கறி கிடைப்பது குறைவாகவே இருக்கும். இந்த வருடத்தில் காய்கறிகள் பற்றாக்குறை வெயிலால் மேலும் மோசமடைந்துள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை சராசரி அளவை விட 4 டிகிரி செல்சியஸ் முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
பருவமழை சீக்கிரம் தொடங்கியிருந்தாலும், இதுவரை பெய்த மழைப்பொழிவில் 18 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த தாமதம் மற்றும் சில பகுதிகளில் போதுமான மழைப்பொழிவு இல்லாததால், கோடை கால பயிர்களின் நடவு தாமதமாகியுள்ளது. இந்த வகை பயிர்கள் சரியான வளர்ச்சிக்கு போதுமான மழைப்பொழிவை பெரிதும் சார்ந்தே இருக்கின்றன.
2023-ஆம் ஆண்டு முதல், உணவுப் பணவீக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அரசாங்க தரவுகளின்படி, பணவீக்க விகிதம் காய்கறிகளில் 28 சதவீதமும், பருப்பு வகைகளில் 17 சதவீதமும், தானியங்ககளில் 8.6 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் வகைகளில் 8.2 சதவீதம், மசாலாப் பொருட்களில் 7.8 சதவீதமும், மற்றும் முட்டையில் 7.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் மழைப்பொழிவு அதிகரித்தால், சப்ளை பற்றாக்குறையை பெருமளவில் ஈடுகட்ட முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜூலை மாதத்தில் காய்கறிகள் வரத்து பாதிக்கப்படவில்லை என்றால், காய்கறிகளின் விலை குறையலாம். உதாரணமாக, தென் மாநிலங்களில் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications