ஈரான் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு.. இந்தியா சார்பில் 2 பேர்.. யார் அவர்கள்?

ஈரான் நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் உயர்மட்ட பிரதிநிதிகள் 2 பேர் மட்டும் பங்கேற்க உள்ளனர்.

அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார்.

ஈரான் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு.. இந்தியா சார்பில் 2 பேர்.. யார் அவர்கள்?

இதையடுத்து பிரதமர் நேரில் பங்கேற்பாரா அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கரிட்டா மற்றும் பிகார் மாநில ஆளுநரும் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

கமேனியின் மறக்க முடியாத மரணம்..

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலின் ஆரம்பக் கட்டத்தில், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி டெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த தாக்குதலில் ஈரானின் ஏழு முக்கிய உயர்மட்ட தலைவர்களும் உயிரிழந்தனர்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

அயத்துல்லா அலி கமேனி இறுதி சடங்கு ஏன் தாமதம் என்ற கேள்வி எல்லோருக்கும் உண்டு. போர் நேரத்தில் அயத்துல்லா அலி கமேனி இறுதி சடங்கு நடத்தினால் பல லட்சம் மக்கள் ஒன்று கூடுவார்கள், இது இஸ்ரேல், அமெரிக்க படைகளுக்கு பெரிய அளவில் சாதகமாக அமையும் என்பதால் சாதமதம் ஏற்ப்பட்டது.

இது மட்டுமா ஷியா முஸ்லிம்களின் புனிதமான மொஹரம் மாதத்தில் வரக்கூடிய துக்க நாட்களுக்குப் பிறகு அயத்துல்லா அலி கமேனி இறுதி சடங்குகளை நடத்தத் திட்டமிட்டதே இந்த காலதாமதத்திற்கு முக்கிய காரணமாகும்

அமைதி பேச்சுவார்த்தை

இதற்கிடையில் அமெரிக்கா - ஈரான் மத்தியில் நாளை மீண்டும் ஜெனிவாவில் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சமீபத்தில் ஹார்முஸ் வழித்தடத்தில் நடந்த தாக்குதல் தான் மிகவும் முக்கியமாக விவாதிக்கப்படும்.

இந்தியா - ஈரான் உறவு

இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளுக்கும், மேற்காசிய பிராந்தியத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் சமநிலை வெளிநாட்டு கொள்கைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இறுதிச் சடங்கில் பங்கேற்கும் சையத் அதா ஹஸ்னைன், இந்திய ராணுவத்தின் முன்னாள் மூத்த அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+