இந்தியாவை மிஞ்சிய சீனா.. எதில் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் 2,02,000 மானவர்கள் இந்தியர்கள் தான். இது கடந்த 2018 - 2019ம் ஆண்டில் அறிக்கை என்றும் கூறப்படுகிறது. எனினும் இதில் முதலிடம் சீனாவுக்கே.

 

2019 Open Doors Report on International Educational Exchange வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 2018 - 2019 கல்வியாண்டில் அமெரிக்காவில் எப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்களைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
இந்தியாவை மிஞ்சிய சீனா.. எதில் தெரியுமா?

அமெரிக்க வர்த்தகத் துறையின் அறிக்கையின் படி, கடந்த 2018ல் அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்களால், சுமார் 44.7 மில்லியன் டாலர் அமெரிக்க பொருளதாரத்தில் பங்களித்ததாக தெரிவித்துள்ளது, இது இதற்கு முந்தைய ஆண்டை விட 5.5 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தொடர்ந்து 10-வது வருடமாக சீனா முதலிடத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 3,69,548 மாணவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 2,02,014 மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்வதாகவும் கூறப்படுகிறது.

இதில் மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 10,95,299 பேர் என்றும், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.05 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 5.56 சதவிகிதம் மாணவர்கள் சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவெனில் அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலானவர்களில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்களும் சீனர்களும் தானாம். இதை Institute of International Education and US Department of State's Bureau of Educational அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்கா தரப்பில் அமெரிக்காவில் சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளி நாடுகளில் படிக்கும் மாணவர்களில் எண்ணிக்கையில் தொடர்ந்து வளர்ச்சியைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான உதவி மாநில செயலாளர் மேரி ராய்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் 3,69,548 மாணவர்களுடன் முதலிடத்தில், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே இந்தியாவில் 2.9 சதவிகிதம் அதிகரித்து, 2,02,014 பேர் கல்வி பயில்வதாகவும், இதே தென்கொரியாவை சேர்ந்த 52,250 பேரும், இதே சவுதி அரேபியாவைச் சேர்ந்த 37,080 பேரும், கனடாவைச் சேர்ந்த மாணவர்கள் 26,122 பேரும் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த நிலையில் வளர்ந்து வரும் சந்தை நாடுகள் ஆண்டுக்கு சில வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளன. குறிப்பாக பங்களாதேஷ் 10 சதவிகித வளர்ச்சியுடனும், இதே பிரேசில் 9.8 சதவிகித வளர்ச்சியுடனும், நைஜீரியா 5.8 சதவிகிதமும், பாகிஸ்தான் 5.6 சதவிகித வளர்ச்சியுடனும் காணப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா
English summary

India sent around 2,02,000 lakh students to America in last year

India sent around 2,02,000 lakh students to America in last year. China is a first place in the report. That’s had in 341,751 students in us. it’s an 2.7 percent increase over the previous year.
Story first published: Monday, November 18, 2019, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X