தீபாவாளி வந்துடுச்சு! ரூ.4.25 லட்சம் கோடி செலவு செய்யப்போகும் மக்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி, நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண்டிகை சீசனின் போது, நாட்டின் சந்தைகளில் கிட்டத்தட்ட ரூ. 4.25 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது ஆடை வியாபாரம், பட்டாசு வியாபாரம், பலகார வியாபாரம் என பல வர்த்தகமும் கலை கட்டும். அதுவும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் கடை தெருக்களில் புகுந்து வெளியில் வர முடியாது. அந்த அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முக்கிய வர்த்தக மையங்களாக அங்கீகரிக்கப்பட்ட 70 நகரங்களில் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் நுகர்வோர் தேவை மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ரக்ஷா பந்தன், கணேஷ் பூஜை, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா போன்ற பண்டிகைகளின் போது காணப்பட்ட பெரிய அளவிலான வியாபாரத்தின் விளைவாக, இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை ரூ.4.25 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தீபாவாளி வந்துடுச்சு! ரூ.4.25 லட்சம் கோடி செலவு செய்யப்போகும் மக்கள்!

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 3.5 லட்சம் கோடியாக இருந்தது. டெல்லியில் மட்டும் பண்டிகை வியாபாரம் ரூ.75,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தைத் தொடர்ந்து, திருமண சீசன் தொடங்கும், இதன் போது நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களும் குறிப்பிடத்தக்க வணிக வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர்.

CAIT பொதுச்செயலாளரான ஸ்ரீ பிரவீன் கண்டேல்வால், பண்டிகைக் காலங்களில், கிட்டத்தட்ட 70 கோடி வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்ய சந்தைகளுக்குச் செல்வதாகக் குறிப்பிட்டார். மக்கள் அனைத்து விலை வரம்புகளிலும், 500 ரூபாய் முதல் பல ஆயிரம் அல்லது லட்ச ரூபாய் வரை செலவழிக்கிறார்கள், வணிகக் கண்ணோட்டத்தில் இந்தப் பருவத்தை முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளார்.

CAIT தேசிய தலைவர் பிசி பார்தியா கூறுகையில், பண்டிகைக் காலத்தில் அனைத்து துறைகளிலும் விற்பனை அதிகரிக்கும். பரிசுப் பொருட்கள், இனிப்புகள், உலர் பழங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்கள், ஆடைகள், நகைகள், பாத்திரங்கள், மொபைல் போன்கள், வீட்டு அலங்கார பொருட்கள், சமையலறை உபகரணங்கள், பாதணிகள், அழகுசாதனப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், பழங்கள், பூக்கள், பூஜைப் பொருட்கள், மண் விளக்குகள் மற்றும் தெய்வச் சிலைகள் ஆகியவற்றிற்கு தேவை அதிகமாக இருக்கும். ஹோட்டல்கள், உணவகங்கள், வண்டிச் சேவைகள் உள்ளிட்ட சேவைத் துறையும் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க வணிகத்தைக் காணும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் ரூ. 4.25 லட்சம் கோடி மதிப்பிலான பண்டிகை வர்த்தகத்தில், சுமார் 13% உணவு பொருட்கள் துறையிலிருந்தும், 9% நகை துறையிலிருந்தும், 12% ஆடைகளிலிருந்தும், 4% உலர்ந்த பழங்கள், இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளிலிருந்தும், 3% வீட்டு அலங்கார பொருட்களிலிருந்தும், 6% அழகு சாதனப் பொருட்களிலிருந்தும், 8% மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல்களிலிருந்தும், 3% பூஜை பொருட்களிலிருந்தும், 3% பாத்திரங்கள் மற்றும் சமையலறை உபகரணங்களிலிருந்தும், 2% கன்பெக்ஷனரி மற்றும் பேக்கரியிலிருந்தும், 8% பரிசுப் பொருட்களிலிருந்தும், மீதமுள்ள 20% ஆட்டோமொபைல்கள், கருவிகள், மின்சாரப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் பிற பொருட்களிலிருந்தும் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 24-ஆம் தேதி அஹோய் அஷ்டமி, அக்டோபர் 29-ஆம் தேதி தந்தேராஸ், நவம்பர் 1-ஆம் தேதி தீபாவளி, நவம்பர் 2-ஆம் தேதி கோவர்தன் பூஜை, நவம்பர் 3-ஆம் தேதி பாய் தூஜ், நவம்பர் 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சத் பூஜை, நவம்பர் 13-ஆம் தேதி துளசி விழா ஆகியவை பண்டிகை காலங்களில் அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+