இந்தியா-வின் மாஸ்டர் மைண்ட்..!! சீனாவுக்கு அல்லு விட்டிருக்கும்..!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட போகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இதனை உறுதி செய்திருக்கின்றனர்.

முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரி விதிப்பை வெறும் 18 சதவீதமாக குறைத்து இருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரை இந்த ஓராண்டு காலமாக வர்த்தக ஒப்பந்த ரீதியாக மிகச் சிறந்த ஒரு ஆண்டாக தான் அமைந்திருக்கிறது. 30க்கும் அதிகமான நாடுகளின் சந்தைகளின் கதவுகள் இந்தியாவுக்காக திறக்கப்பட்டிருக்கின்றன.கடந்த ஓராண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அடுத்தடுத்து பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இவை அனைத்துமே இந்தியாவுக்கு சிறந்த ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளன.

இந்தியா-வின் மாஸ்டர் மைண்ட்..!! சீனாவுக்கு அல்லு விட்டிருக்கும்..!!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்: குடியரசு தினம் முடிந்து அடுத்த நாள் அதாவது ஜனவரி 27ஆம் தேதி அன்று அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பல ஆண்டுகளாக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி 27ஆம் தேதி அன்று இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வரிகளை படிப்படியாக குறைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 96 சதவீத பூஜ்ஜிய வரி அல்லது குறைந்த வரி என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த வர்த்தகர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகளின் சந்தைகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இதனால்தான் இது Mother of all deals என அழைக்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த காலனி உற்பத்தியாளர்கள், துணிமணி உற்பத்தியாளர்கள், தோல் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடியவர்கள், மருந்து என பல்வேறு உற்பத்தி துறை சார்ந்தவர்களுக்கும் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாக இருக்கிறது. தற்போதுள்ள 136 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு தரப்பு ஒப்பந்தம் 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக போகிறது.

இந்தியா-வின் மாஸ்டர் மைண்ட்..!! சீனாவுக்கு அல்லு விட்டிருக்கும்..!!

இந்தியா பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் பெரும்பாலான பொருட்களுக்கு இரு நாடுகளுமே வரியை படிப்படியாக குறைத்து குறைந்தபட்ச வரி அல்லது பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. தற்போதுள்ள 56 பில்லியன் டாலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகம் 2030க்குள் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.

ஓமன் -இந்தியா: ஓமனுக்கும் இந்தியாவுக்கும் 2025 டிசம்பர் மாதத்தில் விரிவான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 98 சதவீத பொருட்கள் வரி இல்லாமல் ஓமன் நாட்டு சந்தையில் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்திய வியாபாரிகளுக்கு மத்திய கிழக்கு சந்தையில் முக்கியமான ஒரு வாய்ப்பினை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

நியூசிலாந்து : கடந்த டிசம்பர் மாதத்தில் தான் இந்தியாவும் நியூசிலாந்தும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன் மூலம் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிச்சலுகைகள் கிடைத்துள்ளன. அதே போல அடுத்ததாக 2025 அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளோடு இந்தியா வர்த்தக கூட்டமைப்பை அறிவித்தது.

கூடிய விரைவில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. இவை அனைத்துமே இந்திய உற்பத்தி துறைக்கு உலகம் முழுவதுமே சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளன. பொதுமக்களுக்கு வெளிநாட்டு பொருட்களின் வருகையால் தரமான போட்டி மிகுந்த விலையில் பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+