ஒரு வருடத்தினை தாண்டி இன்றும் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என்பது இன்றும் நீட்டித்துக் கொண்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியினையும் கவலையையும் ஏற்படுத்தினாலும், இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் எடுத்தாலும் அது பெரிதாக கைகொடுக்கவில்லை.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக முடக்கினாலே, தங்கள் வழிக்கு வந்துவிடும் என மேற்கத்திய நாடுகள் கனவு கோட்டை கட்டின.
ஆனால் இந்த கனவுகோட்டையை சிதறடித்து, இனியும் நாங்கள் எங்களது முயற்சியினை தொடருவோம் என ரஷ்யா, திறம்பட செயல்பட்டு வருகின்றது.
இந்தியா, சீனா தொடர்ந்து வணிகம்
ரஷ்யாவை நேரடியாக எதுவும் செய்ய முடியாத மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக உதவிகரமாக இருக்கும் இந்தியா, சீனா மீது தங்கள் கவனத்தினை திருப்பின. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்க கூடாது என கூறின. ஆனால் இதற்கெல்லாம் செவிசாய்க்காத இந்தியா, சீனா தொடர்ந்து, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருகின்றன.
பல புதிய வணிகம்
எண்ணெய் மட்டும் அல்ல, புதிய பல்வேறு வணிக திட்டங்களுக்கும் திட்டமிட்டு வருகின்றன. டாலரின் பணபரிவர்த்தனை செய்ய முடியாவிட்டால் என, ரூபாய் - ரூபிளில் வணிகம் செய்யலாம் என அடுத்த முயற்சியிலும் இறங்கி, அதனை செயல்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.
ஆக மேற்கத்திய நாடுகளின் எந்த கருத்தினையும் எடுத்துக் கொள்ளாமல், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகின்றது.
இந்தியா உதவியா?
ஒரு புறம் ரஷ்யாவிடம் இருந்து பல நாடுகள் எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ள நிலையில், இந்தியாவும் சீனாவும் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்தியா கணிசமாக எண்ணெய் இறக்குமதியினை அதிகரித்துள்ளது. இது ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக மிக உதவிகரமாக உள்ளது. குறிப்பாக ரஷ்யா போர் புரிவதற்கு உதவிகரமாக இருப்பதாக மேற்கத்திய நாடுகள் தரப்பில் கூறப்படுகிறது.
இரு நாடுகளின் உறவு பாதிக்கலாம்
இதன் காரணமாக ரஷ்யாவுடன் பின்னி பிணைந்திருப்பதால், இந்தியா, சீனா மீதான நல்ல உறவு, அபிப்ராயம் என்பது, நீண்டகால நோக்கில் மேற்கத்திய நாடுகள் உடனான உறவை மட்டுப்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவுடன் நீண்டகாலத்திற்கு பின்னி பிணைந்திருக்கும் சீனா இந்தியாவுடன் மற்ற நாடுகள் உறவை குறைத்துக் கொள்ள நினைக்கலாம். இது இந்தியாவுக்கும் பிரச்சனையாக நீண்டகால நோக்கில் மாறலாம். குறிப்பாக நீண்டகால நோக்கில் பிரச்சனையாக மாறக்கூடும்.
அன்னிய வர்த்தக கொள்கைகளால் பாதிப்பு
உதாரணத்திற்கு இங்கிலாந்து வருடத்திற்கு 3000 பேருக்கு விசா, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என பல திட்டங்கள் உள்ளன. ஆக இதில் தாக்கம் ஏற்படலாம். இதில் ஏதும் பிரச்சனை ஏற்படுமானால் அது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக வர்த்தக ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு 2015 ஆஸ்திரேலியா -ஜப்பான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.
அமெரிக்கா - இந்தியா திட்டம்
அந்த வகையில் அமெரிக்கா இந்தியா இடையே பல்வேறு வகையான வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இருநாடுகளும் வணிகம், கல்வி, தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பலவை குறித்தும் பலவற்றை திட்டமிட்டுள்ளன.
டெக் துறையில் பிரச்சனை
ஆக இது இருநாட்டு வணிக உறவை மட்டும் அல்ல, பொருளாதாரத்திற்கும் ஊக்கத்தினை அளிக்கலாம். குறிப்பாக டெக் துறையினை பொறுத்தவரையில் அமெரிக்காவில் இந்தியர்களின் பங்கு முக்கியமானது. இதில் ஏதும் பிரச்சனை ஏற்படும்பட்சத்தில் இரு நாட்டு ஊழியர்களுக்கும் பிரச்சனையாக மாறக் கூடும். இது இரு நாட்டு வணிகத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் இந்தியாவில் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.
ஏற்றுமதியில் பிரச்சனை
கடந்த 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 422 பில்லியன் டாலராகும். இதில் 24% அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றது. 21% ஐரோப்பாவிற்கும் அனுப்பப்படுகின்றது. மொத்தத்தில் கிட்டதட்ட பாதி மேற்கத்திய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எனினும் இந்த காலகட்டத்தில் ரஷ்யாவுக்கு 0.75% மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே சீனாவுக்கு 5%மும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
சேவை துறையில் ஏற்றுமதி
குறிப்பாக சேவை துறையிலான ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய அளவில் மேற்கத்திய நாடுகளுக்கு செய்து வருகின்றது. இது பொருட்களை விட அதிகம். சேவையில் துறையில் செய்யப்படும் பெரும்பகுதி மேற்கத்திய நாடுகளுக்கே செய்யப்படுகின்றது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் சேவை துறை என்பது முக்கிய பங்கு வகிக்கும். ஆக அதில் ஏதேனும் பிரச்சனை எனில், அது பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
மாணவர்களின் நிலை
மேற்கத்திய நாடுகளின் பல்கலைகழங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக அதிகம். 2021ல் மட்டும் 11,33,749 மாணவர்கள் படித்துள்ளனர் என அரசு தரவுகள் மூலம் அறிய முடிகிறது. இதில் பெரும்பகுதி 51% ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் படிப்பவர்கள், சீனாவில் 2% பேரும், ரஷ்யாவில் 1.4% பேரும் படித்துள்ளனர். அமெரிக்காவில் அதிகம் விசா மூலம் படிக்கும் மாணவர்களில் இந்தியர்கள் அதிகம்.
வேலை விசா
வேலைக்கு விசா மூலம் செல்லும் வெளி நாட்டவர்களிலும் இந்தியர்களின் பங்கே அதிகம். இதில் இந்தியாவின் ஐடி ஜாம்பவான்கள் ஆன விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நாடுகள் மேற்கத்திய நாடுகளில் தங்களது சேவையினை வழங்கி வருகின்றன. தற்போது மேற்கத்திய நாடுகளில் செய்யப்பட்டு வரும் பணி நீக்கத்திலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதும் இந்தியர்களே.
இப்படி ஏராளமான பிரச்சனைகள் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் மேற்கத்திய நாடுகளால் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
More From GoodReturns

டிரம்ப்-ன் ராஜதந்திரம்.. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!



Click it and Unblock the Notifications