மத்திய அரசு அமல்படுத்திய புதிய தொழிலாளர் விதிகளின் கீழ் கிராஜுவிட்டி பெறுவதற்கான தகுதி மற்றும் நிபந்தனையில் மிக முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் (Fixed-Term Employees) மற்றும் சில வகை ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரே நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஒரு ஆண்டு மட்டுமே பணியாற்றியிருந்தாலும் கிராஜுவிட்டி பெற தகுதி பெறுவார்கள்.
இதற்கு முன்பு ஒரு ஊழியர்கள் நிரந்தர ஊழியராக ஒரு நிறுவனத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 5 ஆண்டுகள் முழுமையாக பணியாற்றினால் மட்டுமே கிராஜூவிட்டி கிடைக்கும். ஆனால் தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சில வகை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 1 ஆண்டு பணியாற்றினாலே கிடைக்கும்.
இதேபோல் நிரந்தர ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஐந்து ஆண்டு தொடர்ச்சி பணி என்ற நிபந்தனை மாற்றமின்றி தொடரும் என அறிவித்துள்ளது.
மத்திய அரசு இன்று கொண்டு வந்த மாற்றம் மூலம் இந்திய சட்டதிட்டத்தில் இருக்கும் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களாக மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தின் ஒருபகுதியாக தான் கிராஜூவிட்டி விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

கிராஜுவிட்டி கணக்கீட்டில் மாற்றம் இல்லை
கிராஜுவிட்டி தொகை கணக்கிடும் ஃபார்மூலா-வில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ஒரு ஊழியரின் பணிக்காலம் முடிந்த ஒவ்வொரு ஆண்டு பணிக்கும் கடைசியாகப் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் 15 நாட்கள் ஊதியம் என்ற விகிதத்தில் கிராஜூவிட்டி தொகை வழங்கப்படும்.
இந்த மாற்றம் நிபந்தனையை மட்டுமே விரிவாக்குகிறது. இதனால் இனி அதிகமான ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறும்போது நிதி உதவி, ஓய்வுக் கால பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் பெற முடியும்.
எந்தெந்த துறைகளுக்கு பெரிய தாக்கம்?
ஷார்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தின் பார்ட்னர் பூஜா ராம்சந்தானி கூறுகையில், "இந்த சீர்திருத்தங்கள் ஐடி/ஐடிஇஎஸ், உற்பத்தித் துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள், ஜவுளித் துறை, லாஜிஸ்டிக்ஸ், ஆபத்தான தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஊதியம், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பு தரங்கள், பெண்களின் இரவு நேர பணி உள்ளிட்டவற்றை நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்று தெரிவித்தார்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு இனி சம உரிமை
புதிய விதி மாற்றங்களின்படி தற்காலிக ஒப்பந்த ஊழியர்களும் நிரந்தர ஊழியர்களுக்கு கிடைக்கும் அனைத்து நலன்களையும் பெறுவார்கள். விடுமுறை, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு, போனஸ் உள்ளிட்டவை ஒப்பந்த காலத்துக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும்.
மேலும் நிரந்தர ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அதே அளவு ஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று புதிய விதிகள் கட்டாயப்படுத்துகின்றன. இதனால் நிறுவனங்கள் இனி ஊழியர்களை நிரந்தரமாக்காமல் ஒப்பந்த அடிப்படையில் வைத்திருப்பது கடினமாகிவிடும். இந்த மாற்றங்கள் தொழிலாளர் நலனை மேம்படுத்தி, வேலை மாற்றம் செய்பவர்களுக்கு பெரிய பாதுகாப்பை அளிக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications