E25 பெட்ரோல் வந்தாச்சு.. மக்களே உஷார்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போர் தாக்குதல் குறைந்து நிலையான பேச்சுவார்த்தை கட்டத்திற்கு வந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் கடந்த ஒரு வாரத்தில் பேரலுக்கு 65 டாலர் முதல் 70 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

இதன் எதிரொலியாக இந்திய ரீடைல் சந்தையில் முக்கிய எரிபொருள் விற்பனையாளரான நைரா எனர்ஜி பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 3 ரூபாயும் குறைத்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த குட்நியூஸ் ஆக மத்திய அரசு E25 பெட்ரோலை பயன்படுத்தி ஆய்வு செய்யும் பணிகளை துவங்கியுள்ளது.

E25 பெட்ரோல் வந்தாச்சு.. மக்களே உஷார்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரையில் E20 பெட்ரோல் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் செலவுகளை குறைக்கும் விதமாக எத்தனால் கலப்பு விகிதத்தை 25 சதவீதமாக உயர்த்திய பெட்ரோலின் திறனை ஆய்வு செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. இந்த ஆய்வு வெற்றி பெரும் பட்சத்தில் E25 பெட்ரோல் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

மத்திய அரசின் உத்தரவின் படி ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா (ARAI) E10, E20 பெட்ரோல் கொண்டு இயக்கப்படும் வாகனங்களில் E25 ரக பெட்ரோலை கொண்டு இயக்கி அதன் திறன், பாதிப்புகள், சாதகமான விஷயங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்ய உள்ளது. ARAI அமைப்பின் முடிவுகள் அடிப்படையில் தான் E25 பெட்ரோல் பயன்பாட்டுக்கு வரும்.

இந்தியா முழுவதும் தற்போது E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை பயன்படுத்தும் போது வாகனங்களின் செயல்திறன் பாதிப்பது மட்டும் அல்லாமல் பெட்ரோல் டேங்க் உட்பட பல பாகங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர். ஆயினும் மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை அதிகரிக்க தயாராகி வருகிறது. எத்தனால் கலப்பு மூலம் வாகன தயாரிப்பாளர்களுக்கும் பல்வேறு உற்பத்தி சிக்கல் ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ARAI அமைப்பு E25 பெட்ரோல் கொண்டு சுமார் 1,50,000 கிலோ மீட்டர் வரையில் இயக்கி ஆய்வுகளை மேற்கொள்ளும், இந்த சோதனை அடுத்த ஆண்டு முடிவடையும். ஆய்வின் முடிவுகளை International Centre for Automotive Technology (ICAT) அமைப்பிற்கு அனுப்பி இறுதி முடிவை எடுக்கும்.

இந்தியாவில் E20 பெட்ரோல் கொண்டு இயங்கும் வாகனங்களை 2023ல் துவங்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 2 வருடத்தில் புதிய மாற்றமெனில் ஆட்டோமொபைல் துறைக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+