எப்படி எந்த மனிதனும் ஒரு தீவு அல்லவோ, அதே போல் எந்த ஒரு நாடும் தனிமையில் இல்லை. உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகவும், ஜி 20 நாடுகளின் ஒரு உறுப்பினராகவும், இந்தியா, உலகளாவிய உரையாடல்களில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.

வரலாற்றில் முன்னெப்போதையும் விட, நமது மாண்புமிகு பிரதமரின் பயணங்கள், முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் நமது தேசத்தின் மீது உலகின் கவனத்தை பெரிதும் அதிகரித்துள்ளன.
எனவே, எங்கள் வருவாய் உருவாக்கம் மற்றும் வரி விதிப்பு மாதிரியின் மதிப்பீடு மற்றும் கூட்டாட்சியில் மத்திய மாநில அரசிடையே உறவுகளை, தனியாக மதிப்பிடுவதைக் காட்டிலும், ஒப்பீட்டுச் சூழலில் மதிப்பிடும்பொழுது, முக்கியமான கண்ணோட்டத்தை அளிக்கிறது.
கம்யூனிஸ்ட் கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் சீனாவிலிருந்து, முதலாளித்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளில், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் அல்லது மாநகரங்களுக்கு, நிதி அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதில், இந்தியா கிட்டத்தட்ட எல்லாவற்றையும் விட பின்தங்கியிருப்பதை நாங்கள் கவனிக்கிறோம் என தமிழநாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications