இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை வெற்றிகரமாக இன்று இரவு தாக்கியுள்ளது. இதில், பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, மற்றும் சியால்கோட் உள்ளிட்ட நான்கு இலக்குகளும், PoK பகுதியில் ஐந்து தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலால், மே 7 அதிகாலை 1:45 மணியளவில் காஷ்மீர் பகுதியில் ஜெட் விமானங்கள் பறக்கும் சத்தம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது. ஏப்ரல் 22 பாகல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் உச்சத்தில் உள்ள நிலையில், இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் டார்கெட்: இந்தியாவின் முப்படைகளின் (நிலம், வான், கடல்) ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, பாகிஸ்தான் மற்றும் PoK-இல் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கின. இந்த ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ராணுவத்தையோ அல்லது பாகிஸ்தான் மக்கள் இருக்கும் பகுதியையோ தாக்கப்பட்டவில்லை, டார்கெட் செய்யப்பட்ட 9 இடங்கும் தீவிரவாத முகாம்கள் தான்.
ஒன்பது இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. இதற்கு சிறப்பு துல்லிய ஆயுதங்கள் (precision munitions) பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட் ஆகிய இடங்களும், PoK-இல் ஐந்து முகாம்களும் இலக்காக்க கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல்கள், மே 7 அதிகாலை நடந்த இரண்டு குண்டு வெடிப்பு ஒலிகளும் ஸ்ரீநகரில் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தின. "எங்கள் வீடுகள் விமானங்கள் பறந்ததாலும், குண்டு வெடிப்பாலும் அதிர்ந்தன," என்று ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பீர்பாக் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
மேலும் இப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருக்கிறார்களாக என்பதை உறுதி செய்யும் அளவுக்கு இப்பகுதி மக்களின் மனநிலை மோசமானதாக தெரிவித்துள்ளனர். "இரவு முழுவதும் இந்த ஒலிகள் கேட்டன. எங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை," என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
பாகல்காம் தாக்குதல்: ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பாகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல், 26 பேர் மரணம் அடைந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காஷ்மீர் மக்கள் மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சேமிக்கத் தொடங்கினர். ஆனால், மே 7 அன்று நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட பயிற்சி நடவடிக்கைக்கு (mock drill) ஒரு நாள் முன்னதாக இந்த தாக்குதல்கள் நடந்தது, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பொருளாதார மற்றும் நிதி தாக்கங்கள்: பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் மத்தியிலான போர் பதற்றங்கள் உயர்ந்தது, ஜம்மூ காஷ்மீர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல்கள், பாகிஸ்தானின் நிதிச் சந்தைகளை கடுமையாக பாதித்து, முதலீட்டாளர்களிடையே பயத்தை உருவாக்கியுள்ளன. இதற்கு மாறாக, இந்தியாவின் பங்குச் சந்தைகள், இந்த பதற்றங்களுக்கு மத்தியில் நிலையிலும் வளர்ச்சியை பதிவு செய்து.
இந்த ஆபரேஷன் சிந்தூர், காஷ்மீரில் உள்ளூர் வணிகங்கள், சுற்றுலா, மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் முடக்கலாம்.
புவிசார் அரசியல் பதற்றங்களின் எதிரொலி: இந்திய படைகளின் இந்த தாக்குதல்கள், பாகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டவை. இந்த நடவடிக்கைகள், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருந்த போர் பதற்றங்களை மேலும் மோசமாக்கலாம். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால், இந்த பதற்றங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications