இந்தியாவின் பொருளாதாரம் சேவை துறையை மட்டும் நம்பியிருக்காமல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாயிலாக வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில், உற்பத்தி துறையை சார்ந்து புதிய நிறுவனங்களை ஈர்க்கவும், ஏற்றுமதி செய்யவும் அதற்கான எகோசிஸ்டம் உருவாக்கவும் பல முக்கியமான திட்டங்களை அறிவித்துள்ளது.
இதற்கான பலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு வரும் வேளையில் இந்தியாவின் மே மாத உற்பத்தி அளவீடுகள் வெளியாகியுள்ளது. எஸ் அண்ட் பி ஒவ்வொரு மாத துவக்கத்திலும் உலக நாடுகளின் உற்பத்தி PMI அளவீட்டை வெளியிடும், அந்த வகையில் மே மாதத்திற்கான இந்தியாவின் உற்பத்தி PMI குறியீடு வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் உற்பத்தி PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 31 மாத உயர்வை மே மாதம் எட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்தி PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக உயர்ந்து உச்சத்தை தொட்டு உள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தேவை அதிகரித்த காரணத்தால் இந்தியாவின் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பொதுவாக உற்பத்தி PMI குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அத்துறை வளர்ச்சி பாதையில் இருப்பதாக பொருள், மேலும் PMI குறியீடு என்பது Purchasing Managers' Index என்பதன் சுருக்கம் தான். இந்தியாவில் உற்பத்தி PMI குறியீடு சரிவில் இருந்து மீண்டு சுமார் 23 மாதங்களாக வளர்ச்சி பாதையில் இருப்பது மற்றொரு முக்கியமான விஷயம்.

கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவின் உற்பத்தி துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கிறது, அதிலும் குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பின்பு இந்திய உற்பத்தி துறை சிறப்பாக செயல்படுகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவின் ஜிடிபி 2022 ஆம் நிதியாண்டில் 9.1 சதவீதமும், 2023 ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் உலகின் முன்னணி உற்பத்தி நாடுகளாக இருக்கும் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை உற்பத்தி அளவீடுகளில் சில தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. இந்திய சந்தையில் உருவாக அதிகப்படியான டிமாண்ட் இந்திய உற்பத்தி துறை வளர்ச்சி பாதைக்கு உயர முக்கிய காரணமாக உள்ளது என எஸ் அண்ட் பி குளோபல் அமைப்பின் பொருளாதார பிரிவின் துணை தலைவராக இருக்கும் போலியானா டி லிமா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications