இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு வரவேற்பு.. இந்திய கொடுத்த கடன் உதவி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீலங்கா நீண்ட காலமாகப் பல்வேறு பிரச்சனைகளில் அடுத்தடுத்து சிக்கி வரும் நிலையில், புத்தாண்டை மிகவும் பயத்துடன் துவங்கியுள்ளது.

 

ஸ்ரீலங்கா அதிகப்படியான நிதி சிக்கல்களில் மாடிக் கொண்டு இருக்கும் வேளையில், இந்நாட்டின் பணவீக்கம் வரலாற்று உச்சத்தை எட்டயுள்ள வேளையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாக ஸ்ரீலங்கா கஜானா காலியாக நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

 வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

இந்த சூழ்நிவையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் சனிக்கிழமை விர்ச்சுவல் மீட்டிங் நடத்தினார். கடந்த மாதம் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து இந்த உரையாடல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 மாத உதவி

2 மாத உதவி

இந்த வீடியோ கான்பிரென்ஸ் கூட்டத்தில் இந்தியா அடுத்த 2 மாதங்களுக்கு சார்க் நாணய மாற்று ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் நீட்டிக்கப்படுவதையும், A.C.U இன் கீழ் 515.2 மில்லியன் டாலர் ஒத்திவைக்கப்பட உறுதி அளித்துள்ளது.

கடன்
 

கடன்

இதோடு இந்தியா, இலங்கை அரசுக்கு உதவும் நோக்கில் அந்நாட்டுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியா 1 பில்லியன் டாலரும், இந்தியாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 500 மில்லியன் டாலர் அளவிலான கடனையும் அளிக்கு முடிவு செய்துள்ளது.

முதலீடு

முதலீடு

இதுமட்டும் அல்லாமல் துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் இலங்கையில் இந்திய முதலீடுகளை வரவேற்றுள்ள இலங்கை அமைச்சர், அத்தகைய முதலீடுகளை ஊக்குவிக்க உகந்த சூழல் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

நட்பு

நட்பு

ஜெய்சங்கர், இந்தியா எப்போதும் இலங்கையுடன் நிற்கும் என்றும், COVID-19 தொற்று பாதிப்பு மூலம் ஏற்பட்டு உள்ளத பொருளாதார மற்றும் பிற சவால்களை சமாளிக்க இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் கடல்சார் அண்டை நாடுகள் என்ற வகையில், இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய பொருளாதார தொடர்புகளால் இன்னும் நெருக்கம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India supports SirLanka with new loans to support economy

India supports SirLanka with new loans to support economy இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு வரவேற்பு.. இந்திய கொடுத்த கடன் உதவி!!
Story first published: Saturday, January 15, 2022, 22:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X