இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் (FY25) 6.5% ஆக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. கோவிட் காலத்திற்கு பின்பு இந்திய பொருளாதாரம் மிகவும் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது பொருளாதார வல்லுனர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஆனால் மார்ச் 31, 2025 முடிவடைந்த காலாண்டில் 7.4% வளர்ச்சியுடன், இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தனது இடத்தை தக்கவைத்துள்ளது. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி BVR சுப்பிரமணியம், இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்ததாக அறிவித்தார்.

மார்ச் காலாண்டில் வலுவான தொழில்துறை வளர்ச்சி மற்றும் உலகளாவிய வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் 7.4% வளர்ச்சி பதிவாகி, நான்கு காலாண்டுகளில் மிக உயர்ந்த அளவீட்டை பதிவு செய்துள்ளது இந்திய பொருளாதாரம். அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.2% ஆக உயர்ந்தது, ஆனால் தற்போகு இது முந்தைய மதிப்பீட்டான 5.6% லிருந்து திருத்தப்பட்டது.
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி BVR சுப்பிரமணியம், இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்து, ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியதாக அறிவித்தார்.
சர்வதேச நாணய நிதிய (IMF) தரவுகளை மேற்கோள் காட்டி கூறிய BVR சுப்பிரமணியம், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இந்தியாவை விட பெரிய பொருளாதார நாடுகளாக உள்ளது என்று கூறினார். அடுத்த 2.5-3 ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2024-25 ஆம் ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி என்பது, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் மந்தமான தனியார் முதலீடுகள் காரணமாக பாதிக்கப்பட்டது. ஆனாலும் அரசின் மதிப்பீடுகளுக்கு உள்ளே இருப்பதாக தெரிவித்தார்.
2023-24 ஆம் ஆண்டின் GDP வளர்ச்சி 8.2% இலிருந்து 9.2% ஆக திருத்தப்பட்டது, இது கடந்த 12 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வளர்ச்சியாக பதிவாகியது. இதேபோல் பிப்ரவரி மாதம் ஆர்பிஐ 5 வருடத்தில் முதல் முறையாக ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைந்தது மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வழிவகை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications