தினமும் காலையில் எழுந்து தினசரிகளைப் பார்த்தால் முதல் பக்கத்திலேயே கொரோனா பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துவிடுகிறது.
அந்த அளவுக்கு ஒட்டு மொத்த உலகமும் இந்த கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. உலகின் 6 கண்டங்களில் சுமாராக 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தன் கைவரிசையை காட்டி கொண்டு இருக்கிறது.
இந்த கொரோனா தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, இந்தியா சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது.
என்ன செய்து இருக்கிறார்கள்
முதல் கட்டமாக பல நாட்டு மக்களுக்கு, இந்தியாவில் நுழைய வழங்கப்படும் விசாக்களை ரத்து செய்து இருக்கிறார்கள். எந்த எந்த நாட்டு மக்களுக்கு விசாக்களை ரத்து செய்து இருக்கிறார்கள் என்பதை உள்ளே விரிவாகப் பார்ப்போம். முதலில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தொடங்குவோம்.
ஐரோப்பிய நாடுகள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு இதுவரை இந்திய அரசு வழங்கி இருக்கும் விசாக்கள் மற்றும் இ விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகச் இந்திய அரசாங்கமே சொல்லி இருக்கிறார்கள். இது இதுவரை இந்தியாவில் நுழையாதவர்களுக்கு மட்டுமே பொருந்துமாம்.
மற்ற நாடுகள்
மார்ச் 03, 2020-க்கு முன், இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு வழங்கி இருக்கும் விசா மற்றும் இ விசா அனைத்தும் ரத்து செய்யப்படுகிறதாம். அதே போல தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களுக்கு மார்ச் 03, 2020-க்கு முன் வழங்கிய விசா, இ விசா மற்றும் visa on arrival அனைத்தும் ரத்து செய்யப்படுகிறதாம். இதுவும் இந்தியாவில் நுழையாதவர்களுக்கு மட்டுமே பொருந்துமாம்.
சீனா
சீனாவில் இருந்து வரும் மக்களுக்கு கடந்த பிப்ரவரி 05, 2020-க்கு முன் வழங்கிய விசாக்கள், இ விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறதாம். இதுவும் இந்தியாவில் நுழையாதவர்களுக்கு மட்டுமே பொருந்துமாம். அவ்வளவு ஏன் சில நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு கூட இந்திய அரசு விசா ரத்து செய்து இருக்கிறது என்றால் பாருங்களேன்.
பயணம் செய்தவர்களுமா
சீனா, ஈரான், இத்தாலி தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து இருந்தால், பயணம் செய்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 01, 2020-க்கு முன் வழங்கிய விசாக்கள் மற்றும் இ விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறதாம். ஆக வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மேலே சொன்ன நாடுகளுக்கு பயணித்து இருந்தால், அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications