எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்காகவும் சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளது.
இந்த இலக்கை அடைய அடிப்படைத் தேவை எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தயாரிப்பதற்கான ஆதாரமாக விளங்கும் லித்தியம். இந்தியாவில் லித்தியம் இருப்பு கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், இதற்கான சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த முயற்சியில் ஒரே நேரத்தில் சீனாவை ஓரம்கட்டிவிட்டு, ரஷ்யாவுடன் நெருக்கமாக இந்தியா முயற்சி செய்து வருகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் 90 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எலக்ட்ரிக் பேட்டரிக்காக இந்தியா, சீனாவை நம்பியிருப்பதைக் குறைத்து, லித்தியம் சுத்திகரிப்புத் துறையில் தன்னிறைவு பெறுவதே இந்தியாவின் நோக்கமாகும்.
இதற்கு முதல் படியாக லித்தியம் தாதுக்கான ஆதாரம் கிடைத்த நிலையில், லித்தியம் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தில் உதவி பெறுவதற்காக, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன் இந்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொலிவியா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடமும் இந்திய அரசாங்கமும் சில தனியார் நிறுவனங்களும் லித்தியம் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்திற்கு உதவி கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக பொது வெளியில் அறிவிக்கப்படவில்லை.
இந்த பேச்சுவார்த்தைகளில் மிகவும் முக்கியமானது, ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசடோம் (Rosatom) நிறுவனத்தின் ஒரு பிரிவான டெனெக்ஸ் (TENEX) நிறுவனத்தின் நிர்வாகிகள் இந்திய அரசாங்கத்தை அணுகி, இதுவரை இரண்டு ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
லித்தியம் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தையும், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இரு தரப்பும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் ரஷ்யாவில் இருக்கும் இந்தியாவின் பணத்திற்கும், இந்தியாவில் இருக்கும் ரஷ்ய பணத்திற்கும் தீர்வு காண முடியும்.
உலகின் மூன்றாவது பெரிய கார்பன் உமிழ்வு நாடு மற்றும் அதிகப்படியான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, லித்தியம் சுத்திகரிப்புத் துறையில் முன்னோடியாக இறுக்க முயற்சித்து வருகிறது.
இதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்குமான திட்டத்தை வகுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications