இந்தியா ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு, இதை மட்டுமே காரணம் காட்டி 25 சதவீதம் வரியை விதித்து இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதை சரி செய்ய அமெரிக்க அரசுடன் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தத்திற்காக இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும், ரஷ்யா உடனான வர்த்தகத்தை மேம்படுத்துவதில் குறியாய் உள்ளது. அதிலும் முக்கியமாக விளாடிமிர் புடினின் இந்திய பயணத்திற்கு பின்பு சூடுப்பிடித்துள்ளது என்று சொல்லத்தான் வேண்டும்.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை 2030க்குள் 100 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்குடன் இரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்கா 50 சதவீதம் வரியை உயர்த்திய நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து வரும் வேளையில், தற்போது ரஷ்யாட உடனான வர்த்தக மேம்பாட்டு திட்டம் மூலம் பெரிய வாய்ப்பை பெற உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக இந்தியாவில் இன்ஜினியரிங் பொருட்கள், மருந்துகள், வேளாண்மை பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களை ரஷ்யாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும் வாய்ப்பை கொண்டு இருப்பதாக வணிக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக PTI செய்தியில் குறிப்பிட்டு உள்ளது. இதன் மூலம் இந்த 300 பொருட்கள் தான் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய கவனம் பெறும்.
இந்தியாவின் இருந்து ரஷ்யாவுக்கு பொருட்களின் தற்போதைய ஏற்றுமதி அளவு 1.7 பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சுமார் 37.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்த வேறுபாட்டை தற்போது இந்தியா பெரிய ஏற்றுமதி வாய்ப்பாக மாற்ற வேண்டும் என இலக்கு வைத்துள்ளது.
இந்தியா-ரஷ்யா மத்தியிலான 1000 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கில் தற்போது 59 பில்லியன் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவின் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி 2020இல் $5.94 பில்லியனில் இருந்து 2024இல் $64.24 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 10 மடங்கு அதிகரிப்பு.
இதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் இறக்குமதி 2020இல் 2 பில்லியன் டாலரில் இருந்து 2024இல் 57 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 21 சதவீதம். உரங்கள், தாவர எண்ணெய்கள் போன்றவையும் ரஷ்ய இறக்குமதியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மறுமுனையில் ரஷ்யாவின் மொத்த இறக்குமதி பட்டியலில் இந்தியாவின் பங்கு வெறும் 2.3 சதவீதம் மட்டுமே.
இந்த நிலையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய வணிக அமைச்சகம் இந்தியாவின் திறன் மற்றும் ரஷ்யாவின் தேவையை ஒப்பிட்டு 300 பொருட்களை தேர்வு செய்துள்ளது. இந்த பொருட்கள் பெரும்பாலும் பொறியியல், மருந்து, வேளாண்மை, ரசாயனம் போன்ற முக்கிய துறைகளைச் சேர்ந்தவையாக உள்ளகு. இந்த பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்தால் வர்த்தக பற்றாக்குறை குறையும். ரஷ்யாவின் இறக்குமதி தேவை அதிகம் இருப்பதால் இந்தியாவுக்கு இது பெரிய சந்தை வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரு நாடுகளுக்கும் மத்தியிலான $100 பில்லியன் வர்த்தக இலக்கை இந்தியாவின் ஏற்றுமதி மூலம் நிரப்பவே தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் மூலம் இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன, இந்திய ஏற்றுமதியாளர்கள் இதை முக்கிய வாய்ப்பாக கருதில் செயல்பட்டால் பெரிய வருமானத்தை பார்க்க முடியும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications