இந்தியாவின் டெக் ஸ்டார்ட்அப் துறையில் உலகளாவிய பொருளாதார சவால்களை தாண்டி சிறப்பான வளர்ச்சியை இந்த ஆண்டு பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப் துறையில் சிறப்பான முதலீட்டைப் பெற்ற காரணத்தால் Funding Winter முடிந்து டிராகன் வெளியேற வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப் துறையில் குவிந்த முதலீடுகள் முந்தைய ஆண்டை விட சற்று குறைந்திருந்தாலும், இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எகோசிஸ்டமாக தொடர்ந்து திகழ்கிறது. மேலும் சீனா மற்றும் ஜெர்மனியை இந்தியா முந்தியுள்ளது.

இந்திய ஸ்டார்ட்அப் துறையில் புதிய முதலீடுகள் வராத காரணத்தால் வேலைவாய்ப்புகள், விரிவாக்கம் போன்றவை தடை பெற்றது. தற்போது ஃபண்டிங் வின்டர் முடிந்த நிலையில், டிரகான் நெருப்பை கக்குவது போல் புதிய முதலீடுகள் குவிய துவங்கியது.
2024 ஆம் ஆண்டில், இந்திய தொழில்நுட்பத் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மொத்தம் 11.3 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6% அதிகமாகும். இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் உச்சபட்ச முதலீட்டு அளவை காட்டிலும் 56% குறைவாக உள்ளகு.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் முதலீடுகள் கணிசமாக அதிகரித்தது, சுமார் 540 சுற்றுகளில் 5.32 பில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 8% அதிகமாகும். ஆனால் 2022 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 22% குறைவு.
விண்ட்சர் கேட்டலிஸ்ட்ஸ், ஜெட் நேஷன் லேப் மற்றும் ப்ளூம் வென்சர்ஸ் ஆகியவை சீட் பண்டிங் பிரிவில் அதிகம் முதலீடு செய்த முதலீட்டு நிறுவனங்களாக உள்ளது.
அதேசமயம் அக்ஸல், பீக் XV மற்றும் எலவேஷன் கேபிட்டல் ஆகியவை early-stage முதலீடுகளில் ஆதிக்கம் செலுத்தும் முதலீட்டு நிறுவனங்களாக உள்ளது. சாப்ட்பேங்க் விஷன் ஃபண்ட், கிரியேஜிஸ் மற்றும் அவதார் வென்சர்ஸ் ஆகியவை late-stage முதலீட்டு சுற்றுகளில் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளது.


Click it and Unblock the Notifications