இந்தியாவில் இண்டர்நெட் இணைப்புடன் செயல்படும் CCTV கேமராக்களின் விற்பனையில் முக்கியமான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறைகள், நாட்டின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான கொள்கை மாற்றமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வெளிநாட்டு கண்காணிப்பு கருவிகளை சார்ந்து இருப்பதை குறைத்து, இந்திய தயாரிப்புகளை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், பாதுகாப்பான கண்காணிப்பு தொழில்நுட்ப சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி, இண்டர்நெட் வசதி கொண்ட அனைத்து CCTV கேமராக்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முன் மத்திய அரசின் கடுமையான சான்றிதழ் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம், ஒவ்வொரு இண்டர்நெட் CCTV கருவியை தயாரிக்கும் நிறுவனங்களும் பாதுகாப்பு சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.
இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு இத்தரநிலைகளை பூர்த்தி செய்யாத கருவிகளுக்கு இந்திய சந்தையில் இடமில்லை. இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய ஒப்புதலை பெற மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது.
இந்த நடவடிக்கையால் Hikvision, Dahua, TP-Link போன்ற முக்கிய சீன நிறுவனங்கள் நேரடியாக பாதிக்கப்பட உள்ளன. இந்நிறுவனங்கள் இந்திய சான்றிதழ் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்றால், அவர்களின் இண்டர்நெட் இணைப்பு கொண்ட CCTV கருவிகளை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது.
இப்புதிய விதி குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் CCTV சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கக்கூடும். இதன் மூலம் அனுமதியில்லாத remote access அல்லது உளவு நடவடிக்கைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதனை தடுக்கும் வகையில், புதிய விதிகளில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் ஹார்ட்வேர் மூலத்தைக் (hardware origin) குறிப்பிடுதல், பாதுகாப்பு சோதனைகள் நடத்துதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு கட்டிடங்கள் மற்றும் பொது கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு சாதனங்களுக்கு இது மிக முக்கியமானதாகும்.
இந்த மாற்றம் இந்தியாவில் உள்ள உள்நாட்டு CCTV உற்பத்தியாளர்களுக்கு பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது. CP Plus, Qubo போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையில் அதிக வர்த்தகத்தை பெற்று கூடுதல் சந்தை பங்கைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே இருந்த சான்றிதழ் விதிமுறைகளால் உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சி தொடங்கிய நிலையில், புதிய விதிகள் இந்த வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் என தொழில் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதேவேளையில் மற்றொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது, சீன உற்பத்தியாளர்களின்
போட்டியாளர்கள் குறைவதால் மற்றும் புதிய பாதுகாப்பு சோதனைகள் காரணமாக CCTV கேமராக்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மாற்றம் இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்கவும், பாதுகாப்பான சப்ளை செயின் உருவாகவும் இப்புதிய விதிமுறை வழிவகுக்கும்.
இந்தியாவின் புதிய CCTV கொள்கை, வெறும் வணிக மாற்றமாக அல்லாமல், தேசிய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தன்னிறைவை முன்னிலைப்படுத்தும் ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications