இந்திய பிரதமர் என்று சொல்வதா.. பாரத பிரதமர் என்று சொல்வதா..? என்ற குழப்பத்திற்கு மத்தியில் மக்கள் இருக்கும் வேளையில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றினால் எவ்வளவு செலவாகும் என்பதை ஒரு பார்மூலா மூலம் கணக்கிடப்பட்டு உள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இம்மாத இறுதியில் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றலாம் என்ற கருத்து நிலவி வரும் வேளையில் ஒரு நாட்டின் பெயரை மாற்றுவது எளிதான காரியமில்லை என்பதை தாண்டி விலை உயர்ந்த பணியாகவும் உள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞரும் வலைப்பதிவாளருமான டேரன் ஆலிவியர் கொண்டு வந்த மாதிரியைப் பயன்படுத்தி, இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றினால் சுமார் ரூ.14,000 கோடிக்கு மேல் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
ஸ்வாசிலாந்து அதன் பெயரை ஈஸ்வதினி என்று மாற்றியபோது 2018 இல் டேரன் ஆலிவியர் இந்த மாதிரி பார்மூலா-வை பயன்படுத்தினார். அவருடைய பார்மூலா என்னவென்றால் ஒரு நாட்டின் பெயரை மாற்றுவதையும், பெரிய நிறுவனங்களில் பெயரை மாற்றுவதையும் ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது.
இந்த பார்மூலா படி ஒரு பெரிய நிறுவனத்தின் சராசரி மார்கெட்டிங் செலவு அதன் மொத்த வருவாயில் சுமார் 6 சதவீதம் ஆகும், அதே நேரம் மறுபெயரிடுதல் செலவு ஒட்டுமொத்த மார்கெட்டிங் பட்ஜெட்டில் 10 சதவீதமாக இருக்கலாம் என்பது தான் டேரன் ஆலிவியர் உருவாக்கிய பார்மூலா.
மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.23.84 லட்சம் கோடியாக இருந்தது. எனவே, ஆலிவியரின் மாதிரியின்படி, மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற சுமார் ரூ.14,034 கோடியை செலவழிக்க வேண்டியிருக்கும்.
இந்த தொகை ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு உணவு பாதுகாப்பு திட்டத்திற்காக பயன்படுத்தும் ஒரு மாதத்திற்கான தொகையாகும். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தொகை தான், ஆனால் இந்தியா என பெயர் வைத்திருக்கும் ஒவ்வொரு நிறுவனமும், அமைப்பும் பெயர் மாற்ற வேண்டுமெனில் பெரும் நிதி சுமை இந்திய பொருளாதாரத்தின் மீது விழும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications