இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு முக்கிய சாதனைகளை இதற்கு முன்னர் பதிவு செய்துள்ளது. பல்வேறு ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்தியாவை உலக விண்வெளி துறையில் முன்னணி நாடாக இஸ்ரோ உயர்த்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளத்தை அமைக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இஸ்ரோ தனது விண்வெளி பயணங்களை விரிவுபடுத்த தயாராகி வருகிறது தற்போது மூன்றாவதாக அமைக்கப்பட இருக்கும் ஏவுதளம் ஏற்கனவே செயலில் உள்ள இரண்டு ஏவுதளங்களை விட திறன் மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வசதி அடுத்த தலைமுறை ஏவுதளங்கள் மற்றும் மனித விண்வெளி பயண திட்டங்கள் உட்பட முக்கிய எதிர்கால திட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்த முயற்சிக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் இந்த புதிய ஏவுதளத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள், சுகன்யான் திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் திறன் மற்றும் ஒரு குழுவுடன் சந்திரனில் தரையிறங்குவதற்கான விருப்பங்கள் ஆகியவையும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ஏவுதளத்தை அமைத்து முடிப்பதற்கு ரூ.3,985 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இந்த ஒட்டு மொத்த ப்ராஜெக்ட்டும் 48 மாதங்களுக்குள் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய ஏவுதளத்தின் முக்கிய கூறுகள்: புதிதாக அமைக்கப்பட உள்ள ஏவுதத்தில் ஜெட் டிஃப்ளெக்டர் அமைப்புகள், ஏவுதள கோபுரங்கள் மற்றும் மின்னலை எதிர்த்து செயல்படும் சிஸ்டங்கள், மீத்தேன் மற்றும் கிரையோஜெனிக் எரிபொருட்களுக்கான சேமிப்பு வசதிகள் ஆகியவை இருக்கும். அதோடு மேம்பட்ட அமைப்புகள், கருவிகள் போன்றவையும் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த புதிய ஏவுதளத்தை இரண்டாவதாக அமைந்திருக்கும் ஏவுதளத்தோடு பயன்படுத்தும் அம்சமும் உள்ளது. இதனால் தற்போதுள்ள உள்கட்டமைப்பை பயன்படுத்தியே மூன்றாவது ஏவுதளத்தையும் பயன்படுத்தலாம். இந்த விரிவாக்கம் செயற்கைக்கோள் ஏவுதல்களுக்கு வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், விண்வெளி பொருளாதரத்தில் இந்தியாவின் நிலையை அதிகரிக்கவும் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவின் விண்வெளித் துறையில் மூன்றாவது ஏவுதளம் அமையவிருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிக்கவுள்ளது. இந்த முயற்சிகள் இந்தியாவின் விண்வெளித் திறன்களை மேம்படுத்தி, புதிய தொழில் வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications