உலக அளவில் நிலவும் வருமான சமத்துவமின்மை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் உலக சமத்துவமின்மை ஆய்வகம், 'இந்தியா வருமானம் மற்றும் செல்வம் சமத்துவமின்மை 1922-2023: பில்லியனர் ராஜ்-ன் எழுச்சி' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.
இந்த ஆய்வறிக்கையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40.1 சதவீதம் நாட்டின் 1 சதவீத பணக்காரர்களின் வசம் உள்ளது, இது 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகப்படியான அளவீடாகும்.
இதேபோல், நாட்டு மக்களின் மொத்த வருமானத்தில் 1 சதவீத பணக்காரர்களின் பங்கு 22.6 சதவீதமாக இருந்தது, இது 1922 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகப்படியான அளவீடு என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற ஒருவழியும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பணக்காரர்களின் மீதான வரி விதிப்பு முறை, அவர்களுக்குச் சாதகமாக இருக்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது. இதைச் சரி செய்யும் வகையில் வருமான வரித்துறை சொத்து அடிப்படையில் விதிக்கப்படும் புது கண்ணோட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரையின் படி, வருமான சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான கருவியாக 2 சதவீதம் என்ற "சூப்பர் வரி" பெரிய அளவில் பலன் அளிக்கும். 2022-23 ஆம் ஆண்டில் இருந்த இந்தியாவின் 167 மிக பணக்கார குடும்பங்களின் மொத்த செல்வத்தில் 2 சதவீதம் என்ற "சூப்பர் வரி" விதிப்பதன் மூலம், நாட்டின் வருமானத்தில் 0.5 சதவீதம் அதிகரிக்க முடியும்.
இதன் மூலம் கிடைக்கும் நிதி நாட்டு மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு போன்ற துறைகளில் பொது முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு, நரேந்திர மோடி பிரதமராகத் தேர்வு செய்யும் போது வளர்ச்சி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான வாக்குறுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரது கடந்த இரண்டு பதவிக்காலங்களில், வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தில், பணக்காரர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் இடையே உள்ள வருமான இடைவெளி அதிகரித்து வருவதாக விமர்சகர்களும், குற்றச்சாட்டுகளும் வலுக்கிறது.
2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக 8.4 சதவீதம் வேகமாக வளர்ச்சி அடைந்தது, இதே காலகட்டத்தில் தான் நாட்டின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications