நமக்கெல்லாம் எப்படி ஆதார் கார்டு தனித்துவமான அடையாளச் சான்றாக இருக்கிறதோ? அதேபோல நம்முடைய நிலங்களும் தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் வகையில் நில ஆதார் கார்டை அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் எப்படி நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு இருக்கிறதோ, அதேபோல நம்முடைய நிலத்திற்கும் ஒரு ஆதார் கார்டு இருக்கும். இதனை இனிவரும் 3 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 பட்ஜெட்டில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் நிலச் சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் கீழ், கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு தனிப்பட்ட அடையாள எண் அல்லது பூ-ஆதார் (Bhoo-Aadhaar) என்ற திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நகர்ப்புற நிலங்களை டிஜிட்டல் மயமாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் இந்த இலக்கை அடைய மாநில அரசுகளுக்கு, அரசு நிதியுதவி அளிக்கும். நிலம் தொடர்பான தகராறுகளுக்கு இந்த பூ-ஆதார் ஒரு முற்றுப் புள்ளியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பூ ஆதார் என்றால் என்ன?: கிராமப்புறங்களில் உள்ள அனைத்து நிலங்களும் பூ ஆதாரின் கீழ் வரும். இதற்கு 14 இலக்க தனித்துவமான அடையாள எண் ஒதுக்கப்படும். இந்த செயல்பாட்டின் மூலம், நிலத்தின் அடையாள எண்ணுடன் நிலப்படம், உரிமை மற்றும் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.
இதன் மூலம் வேளாண் கடன் பெறுவது எளிதாகும். இதைத் தவிர, வேறு விவசாய சார்ந்த வசதிகளையும் எளிதாகப் பெற முடியும். மறுபுறம், நகர்ப்புற நிலங்களின் நில ஆவணங்கள் ஜிஐஎஸ் வரைபடத்துடன் கணினிமயமாக்கப்படும்.
பூ ஆதார் எப்படி வேலை செய்யும்?: இதில் முதலில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நிலம் ஜியோடேக் செய்யப்படுகிறது. இதிலிருந்து நிலத்தின் ஜியாக்க்ராபிகள் இன்பர்மேஷனை தெரிந்து கொள்ளலாம்.
அதன் பின், நில சர்வேயர்கள் நிலத்தின் எல்லையை அளவிடுகிறார்கள். இதைச் செய்த பிறகு, சேகரிக்கப்பட்ட விவரங்கள். லேண்ட் ரெக்கார்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனும் அமைப்பில் பதிவேற்றப்படுகிறது.
இதற்குப் பிறகு, கணினி தானாகவே 14-இலக்க பூ ஆதார் எண்ணை நிலத்திற்கு உருவாக்குகிறது. இந்த பூ ஆதார் திட்டம் நிச்சயமாக இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் நில உரிமை தொடர்பான தெளிவு, விரைவான பரிமாற்றங்கள், கடன் வசதி மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பல நன்மைகள் கிடைக்கும். மேலும் நிலம் தொடர்பான தகராறுகளை குறைக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications