இந்தியாவை சேர்ந்த இளம் வயதினருக்கு படிப்பு, வேலை வாய்ப்பு இவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக இருப்பது தலைமுடி உதிரும் பிரச்சினை. வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றம், உணவு பழக்க வழக்கம், மாசு கலந்து சுற்றுச்சூழல், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருக்கிறது.
இந்தியாவில் முடி உதிர்வு பிரச்சினையை சந்திக்கும் ஆண்களில் 50% பேர் 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆண்கள், பெண்கள் என இரு பாலருமே தங்களின் தலை முடி உதிர்வு பிரச்சனை நேரடியாக தங்களின் தன்னம்பிக்கையே பாதிப்பதாக கூறுகின்றனர். தங்களுடைய ஒட்டு மொத்த இமேஜையே டேமேஜ் செய்கிறது என்கிறார்கள். குறிப்பாக திருமணம் போன்றவற்றுக்கு தயாராகும் போது தலைமுடி பிரச்சனையும் அதனால் ஏற்படக்கூடிய வழுக்கையும் இளைஞர்களுக்கு பெரிய சவாலை ஏற்படுத்துகிறது.

இதனால் தான் முடி உதிர்வு ஏற்பட்டாலே உடனடியாக அதனை சரி செய்வது எப்படி என்பதில் ஆர்வம் காட்டு தொடங்குகின்றனர். பல கட்ட முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காமல் இறுதியாக அவர்கள் நாடி செல்வது ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சைகள். தற்போது சமூக வலைத்தளங்கள் தொடங்கி எங்க பார்த்தாலும் நீங்கள் ஹேர் டிரான்ஸ்பிளான்ஸ் சிகிச்சை குறித்து விளம்பரங்களை பார்க்க முடியும். இந்தியாவில் ஓராண்டுக்கு 3.5 லட்சம் முடி மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.
இந்தியர்கள் மட்டுமல்ல இந்த சிகிச்சைக்காகவே இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களும் அதிகம். கடந்த ஆண்டில் தான் அரசு முடி மாற்று அறுவை சிகிச்சை கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரியை 18%இல் இருந்து 5% ஆக குறைத்தது. எனவே முடிமாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் மலிவானதாக மாறி இருக்கிறது.
ஆனால் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையில் ஒரு மருத்துவ மாணவரே முடிமாற்று அறுவை சிகிச்சைக்கு சென்று உயிரிழந்தார். அண்மையில் கூட கான்பூரில் இரண்டு இளைஞர்கள் இந்த சிகிச்சையால் ஏற்பட்ட பக்க விளைவால் உயிரிழந்தனர். சமீபகாலமாகவே மத்திய அரசுக்கு இது தொடர்பான புகார்கள் அதிகரிக்க வண்ணம் இருந்தன. எனவே தான் மத்திய அரசு 2022ஆம் ஆண்டு முடிமாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெளியிட்ட வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் எனப்படும் முடிமாற்று அறுவை சிகிச்சை தொடக்கத்தில் punch grafting முறையில் அதாவது முடி வளர்ச்சி அடையும் திறனுள்ள தோல் பகுதியை வழுக்கை பகுதியில் வைத்து சிகிச்சை செய்வார்கள். இது தோல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் பின்னாளில் Follicular Unit Extraction (FUE) , Direct Hair Implantation ஆகிய புதிய முறைகள் வந்தன. இதில் ஆரோக்கியமான hair folliculeகளை மட்டுமே இடமாற்றம் செய்தால் போதும்.

சிகிச்சை எளிமையானதால் ஈசல் போல நாடு முழுவதும் முடி உதிர்வு சிகிச்சை மையங்களும் செயல்பட தொடங்கின. இதில் நிபுணத்துவம் பெறாதவர்களும் அனுபவம் இல்லாதவர்களும் கிளீனிக் தொடங்கி சிகிச்சை தருவது தான் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தான் மத்திய அரசு முறையான சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள் மட்டுமே முடிமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
இந்த சிகிச்சை என்பது கிட்டத்தட்ட ஒரு மிகப்பெரிய ஆபரேஷன் செய்வதற்கு இணையானது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நீங்கள் ஹேர் டிரான்ஸ்போர்ட் செய்து கொள்ள செய்து கொள்ளும் ஐடியாவில் இருந்தால் சரியான மருத்துவரை தேர்ந்தெடுத்துச் செல்ல வேண்டும் என்கின்றனர். மத்திய அரசும் தற்போது ஏர் டிரான்ஸ்பிளான்ட் செய்யும் நிறுவனங்களை கடுமையாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது. இந்த சிகிச்சையை வழக்கமான காஸ்மடிக் சலூன் சிகிச்சை பிரிவில் இருந்து தீவிர மருத்துவ அறுவை சிகிச்சை என்ற பிரிவின் கீழ் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.
எனவே எம்பிபிஎஸ் முடித்த மருத்துவராக இருந்தாலும் சரி அவர் தோல் சம்பந்தப்பட்ட பிரிவில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரால் மட்டுமே இந்த முடி மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். அது தவிர சிகிச்சைக்கு வரக்கூடிய நபரிடம் முறையான மருத்துவ பதிவு சான்றிதழ்களை காட்ட வேண்டும். முடி மாற்று அறுவை சிகிச்சையில் என்னென்ன அபாயங்கள் இருக்கின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்து எழுத்துப்பூர்வ ஒப்புதலை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான அழகு சார்ந்த சிகிச்சையாக இல்லாமல் முடிமாற்று அறுவை சிகிச்சை என்பது பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு செயல்முறை. அதாவது மயக்க ஊசி செலுத்தும் போது மயக்க மருந்து நிபுணர்கள் உடன் இருக்க வேண்டும், சரியான அளவில் மருந்து கையாள தெரிந்த மருத்துவர்கள் கட்டாயம் உடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. யார் வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
திடீரென நோயாளிக்கு ஏதேனும் பக்க விளைவு ஏற்படுகிறது எனும்போது உடனடியாக அவரைக் காப்பாற்ற தேவையான கருவிகளும் சிகிச்சை வசதிகளும் இந்த கிளீனிக்குகளில் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. முடி உதிர்வு பிரச்சினைக்கு சிகிச்சை எடுக்க செல்பவர்கள் கட்டணம் குறைவாக உள்ளதாக சலுகை தருகிறார்கள் என்பதை மட்டும் கவனிக்காமல் இந்த துறையில் இந்த சிகிச்சை மேற்கொள்ள அவர்கள் தகுதியானவர்களா, என்பதையும் அங்கே இருக்கும் மருத்துவ வசதிகளையும் கண்காணித்து முடிவெடுப்பது சிறந்தது.
இந்தியாவில் முடிமாற்று அறுவை சிகிச்சை சந்தை தற்போது 250 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டு சந்தையாக உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் 20% என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிநாட்டவர்களும் அதிகமாக இங்கே வர தொடங்கியுள்ளனர். எனவே இதனை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications