ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவில் விதிக்கப்படவுள்ள ரெசிபிராக்கல் வரியை தவிர்க்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதற்காக இந்தியா அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இறக்குமதி வரிகளை குறைக்க இந்தியா முன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உள்நாட்டு தொழில் துறை ஆதரவுடன் இந்தியா இறக்குமதி வரிகளை குறைக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தற்போது அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்க வாஷிங்டன் டிசியில் உள்ளார். இவர் பல பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் வரிகளை குறைத்து அறிவிக்ககூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இண்டஸ்ட்ரியல் கூட்ஸ் ஆகியவை அடங்கும். உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்காமல் இந்த பொருட்களின் மீதான வரியை குறைக்கவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அதேபோல ஆட்டோமொபைல் உட்பட பல பொருட்களுக்கும் வரி குறைப்புகளை இந்தியா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது. இருதரப்பு வர்த்தகத்தை பாதுகாக்க வேண்டுமானால் கண்டிப்பாக வரி குறைப்புகளை வழங்க வேண்டிய கட்டத்தில் இந்தியா உள்ளது. இருதரப்பு வர்த்தகம் 190 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு தலைவர்களும் வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய முடிவுகளை கலந்தாலோசித்தனர். அதோடு 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்கவும் இலக்கு நிர்ணயித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி வரிகளை குறைத்து வணிகத்தை மேம்படுத்துவதாகும். ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ரெசிபிராக்கல் வரிமுறை அமலுக்கு வரும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலைகள் எழுந்துள்ளது. ஏனெனில் ரெசிபிராக்கல் வரிமுறை அமலுக்கு வந்தால், இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் அதிக விலை கொண்டதாக மாறும். இதனால் இந்திய ஏற்றுமதி குறைய வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்கா வரி குறைப்புகளை எதிர்பார்க்கக் கூடிய முக்கிய பொருட்களில் மின்சார வாகனங்கள், மருத்துவம் மற்றும் நோய் கண்டறிதல் உபகரணங்கள் உள்ளிட்ட ஆட்டோ மொபைல்கள் அடங்கும். மேலும் மருந்துகள், ஜவுளி, காலணிகள் உள்ளிட்ட பொருட்களிலும் இந்தியா இதே போல் வரி சலுகைகளை கோர வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications