ரஷ்யா செய்த உதவி.. இந்தியாவுக்கு ஜாக்பாட்.. அமெரிக்கா, ஐரோப்பா ஷாக்..!

இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் இல்லாத காரணத்தால் இந்திய மக்களின் ஒட்டுமொத்த தேவைக்கும் வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து இந்தியாவில் சுத்திகரிப்புச் செய்து எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்தி வருகிறோம்.

இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது, ஆனால் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு மொத்தமும் மாறியுள்ளது எரிபொருள் சந்தையில் இறக்குமதி நாடாக இருந்த இந்தியா தற்போது ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் நுழைந்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் மேப்-ல் பெரும் மாற்றம் நடந்துள்ளது.

 ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ரஷ்யா மிகப்பெரிய அளவிலான தள்ளுபடியில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்தக் கேப்-ஐ பயன்படுத்தி இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெய்-ஐ எரிபொருளாக மாற்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது.

மேற்கத்திய நாடுகள்

மேற்கத்திய நாடுகள்

உக்ரைன்-க்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது பல்வேறு தடையை விதித்த காரணத்தால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிபொருள், எரிவாயு வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் அனைத்து இடத்திலும் எரிபொருளை வாங்கி வருகிறது.

ஜி7 நாடுகள் தடை

ஜி7 நாடுகள் தடை

ரஷ்யா மீது ஜி7 நாடுகள் தடை உத்தரவுகளை மாறி மாறி விதிக்க முக்கியமான காரணம் ரஷ்யாவின் எனர்ஜி வருவாயை முடக்குவது தான், இந்த நிலையில் இந்தியாவுக்குத் தள்ளுபடி அளிக்கும் வேளையில் ரஷ்யாவின் எனர்ஜி வருவாய் ஒருபக்கம் குறைந்தாலும் மறுபக்கம் சர்வதேசச் சந்தையில் உருவாகும் எரிபொருள் தட்டுப்பாட்டை இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதி மூலம் கணிசமாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

இந்தியா - ரஷ்யா

இந்தியா - ரஷ்யா

இந்தியா ரஷ்யா-விடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து உலக நாடுகள் கடுமையாக விமர்சனம் செய்தாலும் ஜி7 நாடுகள் எவ்விதமான கட்டுப்பாடும் விதிக்காமல் தொடர்ந்து அனுமதித்து வருகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த நிலையில் இந்தியா டிசம்பர் மாதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஒரு நாளுக்கு 89000 பேரல் அளவிலான கேசோலின் மற்றும் டீசல்-ஐ ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த 4 வருடத்தில் அதிகமான அளவாகும்.

ஐரோப்பா

ஐரோப்பா

இதேபோல் ஜனவரி மாதம் மட்டும் ஐரோப்பாவிற்கு ஒரு நாளுக்கு 172000 பேரல் அளவிலான லோ சல்பர் டீசலை ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இது அக்டோபர் 2021ல் இருந்து அதிகப்படியான அளவாகும்.

ரஷ்யா மீது புதிய தடை

ரஷ்யா மீது புதிய தடை

இதேவேளையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா பெட்ரோலியம் பொருட்கள் மீது புதிய தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஐரோப்பா நாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரும் காரணத்தால் இந்தியாவின் தேவை உலக நாடுகளுக்கு அதிகரித்துள்ளது.

 கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்

ஞாயிற்றுக்கிழமை தடை மூலம் ஐரோப்பாவில் கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் நெருக்கடி உருவாக உள்ள காரணத்தால் பெரும் பாதிப்பு உருவாக உள்ளது. இதனால் ஐரோப்பாவில் எரிபொருள் விலை உயர்வது மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+