உலகளவில் வளரும் நாடுகளுக்கு தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சனை டாலர், வெளிநாட்டு இறக்குமதிக்கு 100-க்கு 99 சதவீதம் டாலர் மட்டுமே அனைத்து நாடுகளும் பயன்படுத்துவதால் அமெரிக்க டாலருக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது.
இதேவேளையில் அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டிவிகிதம் அதிகரிக்கும் போது டாலர் புழக்கம் குறைந்து பிற நாட்டு நாணயக்களுத்து எதிராக டாலரின் மதிப்பு அதிகரித்து அதிகப்படியான தொகையை ஒரு பொருளுக்கு செலவிட வேண்டிய நிலை உள்ளது. இது வளரும் நாடுகள் மத்தியில் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

இதை தடுக்கும் விதிமாக ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்ய அரசு விதைத்த விதை தற்போது மரமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் மத்தியில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க dedollarisation என்ற கொள்கை பரவலாக வளர்ந்து வருகிறது. இக்கொள்கையின் அடிப்படையே டாலருக்கு அல்லாத நாணயத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தான்.
இந்த நிலையில் இந்தியாவும் - ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) இரு நாடுகள் மத்தியில் நிதி பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு அந்தந்த நாடுகளின் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) சனிக்கிழமை கையெழுத்திடப்பட்டு உள்ளன.
இதன் மூலம் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-க்கு அமெரிக்க டாலர் அல்லாமல் இந்திய ரூபாய் வாயிலாக செலுத்த முடியும். இதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவில் இருந்து வாங்கும் உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு டாலர் அல்லாமல் திர்ஹாம்-ல் செலுத்த முடியும்.
இதற்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி-யின் (RBI) கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியின் கவர்னர் கலீத் முகமது பலமா ஆகியோர் இரு நாடுகள் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது பிரதமர் மோடியின் பிரான்ஸ்-க்கு அடுத்து நடந்த ஐக்கிய அரபு அமீரக பயணத்தில் நடந்துள்ளது.
இதேபோல இந்தியாவின் Unified Payments Interface எனப்படும் யுபிஐ உடன் UAE நாட்டின் Instant Payment Platform ஐபிபி உடன் இணைக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்லது. இதன் மூலம் இந்தியர்கள் தங்களுடைய யூபிஐ தளத்தை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தின் இன்ஸ்டென்ட் பேமெண்ட் தளத்தில் பேமென்ட் செய்ய முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டுக்கு 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்ட நிலையில் ஐரோப்பாவில் முதல் நாடாக பிரான்ஸ், இந்திய அரசின் ரியல்டைம் பேமெண்ட் தளமான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் UPI சேவையை பயன்படுத்த இந்தியாவும் பிரான்ஸ் நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications