இந்தியா மற்றும் பிரிட்டன் நாட்டு மக்களும், தொழிலதிபர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த வர்த்தக ஒப்பந்தம் இன்று இரு நாடுகளுக்கும் இடையே நடந்தது. அமெரிக்காவுடன் இன்னும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யாமல் இருக்கும் வேளையில் பிரிட்டன் நாட்டுடனான இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய வாய்ப்பாக இருக்கப்போகிறது.
இதிலும் குறிப்பாக 2 துறைக்கு இந்த ஒப்பந்தம் ஜாக்பாட் ஆக இருக்கப்போகிறது என்பது தான் இப்போதைய முக்கியமான விவாதமாக இருக்கிறது. பலரும் மதுபானம் விலை குறையும், கார் விலை குறையும் என பேசி வரும் வேளையில், பலரும் அமெரிக்காவில் வரி விதிப்பாலும், டிரம்ப்-ன் விசா கொள்கையாலும் அதிகமாக பாதிக்கப்படப்போகும் துறை என கூறப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு துறைக்கும், ஐடி சேவை துறைக்கும் இந்த FTA ஒப்பந்தம் ஜாக்பாட் என கூறப்படுகிறது.

இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறைக்கு இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய பலனை அளிக்கிறது. ஸ்மார்ட்போன்கள், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கம்பியூட்டர், லேப்டாப், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மற்றும் இன்வெர்ட்டர்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு பிரிட்டனில் இனி ஜீரோ இறக்குமதி கட்டணம் விதிக்கப்பட உள்ளது.
இந்த வரி குறைப்பு இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புகளை பிரிட்டன் சந்தையில் மிகவும் குறைந்த விலையிலும், அதிக எண்ணிக்கையிலும் ஏற்றுமதி செய்ய விற்க முடியும். இதனால் அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்கள் எளிதாக பிரிட்டன் சந்தைக்கும் மடைமாற்ற முடியும்.
இத்துறையில் இருக்கும் இந்திய தொழிலதிபர்களுக்கு இது புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்பு விகிதத்தையும் அதிகரிக்கும். இதேவேளையில் அமெரிக்கா உடனும் சமுகமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டால் இந்தியாவுக்கு டபுள் ஜாக்பாட்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் துறைக்கு அடுத்தப்படியாக , இந்த ஒப்பந்தம் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நன்மை பயக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருக்கும் ஐடி மற்றும் ITES சேவை நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன, இது இந்திய நிறுவனங்களுக்கு புதிய சந்தைகளை திறக்க உள்ளது. அதாவது இந்திய நிறுவனங்கள் அளிக்கும் சேவைக்கு ஜீரோ வரி.
2024-25 ஆம் ஆண்டில் இந்திய ஐடி சேவை துறையின் ஏற்றுமதி மதிப்பு 32 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இது இந்தியா - பிரிட்டன் FTA ஒப்பந்தம் மூலம் வரும் ஆண்டுகளில் 15-20% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இது இந்திய ஐடி நிபுணர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும், நிறுவனங்களுக்கு புதிய வர்த்தகத்தை பெற உதவும்.
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் ஐடி துறையின் வளர்ச்சி, இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடியாக பலன் தரும்.


Click it and Unblock the Notifications